பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/454

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

442 ’பிரிவிலக ஆவன வேருேர் சொல்லால் இடையிடப்படாது ஒட்டி நிற்பன. (உ-ம்) நிவந்தோங்கு பெருமலே’ எனவும் துறுகன் மீமிசை எனவும் வரும். இனி, ஒரு பொருளிரு சொற் பிரிவில வரையா? எனப் பாடங் கொண்டு, ஒரு பொருள் மேற்கிடந்த இரு சொற் பிரி வின்றி நின்றன வரையப்படா எனப் பொருள் கூறி, வையைக் கிழவன் வயங்குதார் மாணகலம் தையலா யின்று நீ நல்குதி நல்காயேற் கூடலார் கோவொடு நீயும் படுதியோ நாடறியக் கவ்வை யொருங்கு?? எனவரும் பாடலில் வையைக் கிழவன் எனப்பட்டானும் கூட லார் கோவும் ஒருவனுதலால் அவ்விரு சொல்லும் ஒரு பொருட் கண் பிரிவின்றி நின்றன எனவும், பிரிவில வரையப்படா எனவே பிரிவுடையன நீக்கப்படும் எனவும் கருத்துரைத்து கொய்தளிர்த் தண்டலைக் கூத்தப் பெருஞ்சேந்தன் வைகலு மேறும் வயக்களிறே - கைதொழுதேன் காலேக வண்ணனைக் கண்ணுரக் காணவென் சாலேகஞ் சார நட2 என்புழிக் காலேகவண்ணன் என்பது காலேக வண்ணம் என்னும் சாந்து பூசினர்க்கெல்லாம் எய்தும் பெயராதலின் முற் குறித்த கூத்தப் பெருஞ் சேந்தனிற் பிரிந்து நிற்றலின் அவை ஒருபொருள் மேல் அமையா எனவும் உதாரணங்காட்டி விளக் குவர் இளம்பூரணர். இவ்வுரையைத் தழுவி அமைந்தது, 396. ஒருபொருட் பல்பெயர் பிரிவில வரையா. எனவரும் நன்னூற் சூத்திரமாகும். ஒரு பொருள் கருதிவரும் பலபெயர் பொருளின் நீங்கா வாயின், ஒரு பொருட்குப் பலபெயர் வந்தனவென்று கடியப் படா எ-று .