பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/458

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

446 ளுணர்த்தப்படும். இவ்வாறே இறந்தகாலத்தின்கண் உண்ட னம் உண்டாம் எனவும், நிகழ்காலத்தின்கண் உண்ணு நின்ற னம், உண்ணுநின்ரும், உண்கின்ரும் எனவும், எதிர்காலத்தின் கண் உண்குவம், உண்பாம் எனவும் வரும் வேறுபாடெல் லாம் கூறிற் பெருகுமென்றஞ்சிக் கூறிற்றிலயிைனும் அவ்வேறு பாடெல்லாம் உணர நூல்நெறி பிழையாது பிரித்துக் காட்டுதல் இந்நூலக் கற்றுணர்வோர் கடமையாம் என அறிவுறுத்திய வாரும் . இதன்கண் பல்வேறு செய்தியின் நூல்’ என்றது அகத்திய முதலிய தொன்னூல்களே; செய்தி-செய்கை+விதி. இனி இச்சூத்திரத்திற்கு, செய்யுளிடத்தும் வழக்கிடத்தும் என்னுற் கிளக்கப்படாது தொன்னூலாசிரியராற் கிளக்கப்பட்டு எஞ்சி நின்ற சொற்கள் எல்லாவற்றையும் அவ்வத் தொன்னூல் நெறியிற் பிழையாமல் சொல்லே வரைந்துணரக் கொணர்ந்து பிரித்துக்காட்டுக’ என மற்றுமோர் உரை வரைந்து, இடைவழு வமைதி பலவற்றுக்கு எடுத்துக் காட்டுத் தந்து விளக்குவர் சேன வரையர். சொல்லதிகாரப் புறனடையாகிய இதனைத் தழுவியமைந்தது, 460. சொற்றெறு மிற்றிதன் பெற்றியென் றனைத்தும் முற்ற மொழிகுறின் முடிவில வாதலிற் சொற்றவற் றியலான் மற்றைய பிறவும் வகுத்துரை யாதவும் வகுத்தனர் கொளலே. எனவரும் நன்னூற் குத்திரமாகும். சொற்ருெறும் இத்தன்மைத்து இதன் இலக்கணம் என்று முற்ற மொழியப் புகின் வரம்பிலவாம் ஆதலின், எடுத்துக்கூறிய சொற்களின் இலக்கணங்களைக் கொண்டு சொல் லாதனவற்றின் இலக்கணங்களையும் ஒப்புமை கருதி இதுவும் அதுவென முற்ற விளங்கவுணர்தல் நூலோதித் தெளிதற்குரிய மானுக்கர் திறம்ை?’ என்பது இதன் பொருளாகும். 一濑一