பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/457

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

445 (இ-ள்) முன்னிலே குறித்து நின்ற ஒருமைச்சொல், பன்மையொடு முடிந்ததாயினும், நீக்கப்படாது; அம்முடிபு ஆற்றுப்படைச் செய்யுளின்கண் போற்றியுணரப்படும். எ-று. ஆற்றுப்படை மருங்கின்’ எனப் பொதுவகையாற் கூறினராயினும், சுற்றத்தலேவன் ஒருவனே நோக்கி அவனது சுற்றத்துடன் ஆற்றுப்படுத்தற்கண் வருவது இவ் ஒருமை பன்மை மயக்கம் என்பதனேக் குறித்துணர்க என அறிவுறுத்து வார் ஆற்றுப்படை மருங்கிற் போற்றல் வேண்டும்’ என்ருர் . கூத்தராற்றுப் படையுள் கலம்பெறு கண்ணுளர் ஒக்கல் தலைவ? என நின்ற முன்னிலேயொருமைச் சொல், இரும்பே ரொக்கலொடு பதமிகப் பெறுகுவிர் என்னும் பன்மைச்சொல் லொடு முடிந்தவாறு காண்க. ஒருவர் ஒருவ்ரை ஆற்றுப்படுத் தற் கண் முன்னிலே யொருமை பன்மையொடு முடிதல் செய் யுடகே யன்றி வழக்கிற்கும் ஒக்கும் ஆதலால் ஆற்றுப்படை? எனப் பொது வகையாற் கூறினர். சசுங் செய்யுண் மருங்கினும் வழக்கியன் மருங்கினும் மெய்பெறக் கிளந்த கிளவி யெல்லாம் பல்வேறு செய்தியி னுானெறி பிழையாது சொல்வரைந் தறியப் பிரித்தனர் காட்டல். இஃது இவ்வதிகாரத்துள் ஒதப்பட்ட சொற்கெல்லாம் ஓர் புறனடை கூறுகின்றது. (இ-ள்) செய்யுளிடத்தும் வழக்கிடத்தும் இவ்வதிகாரத் தின் கண் பொருள் விளங்கச் சொல்லப்பட்ட சொற்கள் எல்லா வற்றையும் பல்வேறு செய்கையையுடைய தொன்னூலின் நெறி முறையில் தவருது சொல்லே வேறுபடுத்து உணருமாறு பிரித்துக் காட்டுக. எ-று. நிலப்பெயர் குடிப்பெயர்?’ எனவும், 'அம்மாமெம்மேம்: எனவும் மேற்பொதுவகையாற் கூறப்பட்டன. அருவாளனிலத் தான் என்னும் பொருட்கண் அருவாளன் எனவும், சோழனிலத் தான் என்னும் பொருட்கண் சோழன் எனவும் நிலம்பற்றி வரும் பெயர்கள் எல்லாம் நிலப்பெயர் எனப் பிரித்துப் பொரு