பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/456

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

444 ஏற்புழிக் கோடலால் இம் மயக்கம் உயர்திணைக்கண்ணது என்று கொள்க. தொல்காப்பியர் கூறிய இவ்வழுவமைதியுடன் இது போன்ற ஏனைய வழுவமைதியையும் இணேத்துக் கூறும் முறையில் அமைந்தது, 379. ஒருமையிற் பன்மையும் பன்மையின் ஒருமையும் ஓரிடம் பிறவிடந் தழுவலு முள வே. எனவரும் நன்னூற் சூத்திரமாகும். ஒருமைச் சொல் பன்மை தழுவலும், பன்மைச்சொல் ஒருமை தழுவலும், ஓரிடத்துக்கு உரியசொல் பிறவிடங்கள் தழுவலும் உளவாம்’ என்பது இதன் பொருள். (உ-ம்) நீர் இருந்தன, பால் இருந்தன எனவும், நாடெல் லாம் வாழ்ந்தது, ஊரெல்லாம் உவந்தது எனவும் அஃறிணை ஒருமையுடன் பன்மையும் பன்மையுடன் ஒரு மையும் மயங்கின. அஃதை தந்தை அண்ணல் யானை அடுபோர்ச் சோழர் எனவும் ஏவலிளேயர் தாய் வயிறு கரிப்ப22 எனவும் உயர்திணை யொருமையிற் பன்மையும் பன்மையின் ஒருமையும் மயங்கின. இனி இடமயக்கமாவன :- சாத்தன் தாய் இவை செய் வலோ: ; நில்லாது பெயர்ந்த பல்லோருள்ளும், என்னே குறித்த நோக்கமொடு’ (அகநா-110) எனத்தன்மை படர்க்கை தழி இயின. எம்பியை யீங்குப் பெற்றேன். (சீவக-1760) என்பது முன்னிலே படர்க்கை தழி இயது. நீயோ அவனே யாரிது செய்தார்', 'யானே அவனே யாரிது செய்தார்: "அவனே நீயோ யானே யாரிது செய்தார் என்ன விரவியும் ஒரிடம் தழி இயின. சசுஉ. முன்னிலே சுட்டிய வொருமைக் கிளவி பன் மையொடு முடியினும் வரை நிலே யின்றே ஆற்றுப்படை மருங்கிற் போற்றல் வேண்டும். இது செய்யுட் குரியதோர் முடிபு கூறுகின்றது.