பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 (இ-ள்) வினையினுல் வேறுபடும் பல பொருளொரு சொல் வேறுபடு வினையின்றிப் பொதுவினயைக் கொள்ளுங்கால் (இனம் சார்பு முதலிய) பிறிதொரு சொல்லொடு பொருந்திப் பொருள் தோன்றும் எ-று. ஒன்றுவினை என்றது. பல பொருள்களோடும் பொருந்துதற் கியைந்த பொதுவினையை, ஒன்றித் தோன்றுதலாவது பிறி தொரு சொல்லுடன் பொருந்திப் பொருள் புலனுதல். (உ-ம்) மா வீழ்ந்தது என்றவழி இன்ன மா என்பது அறியலாகாமையின், யானே முறித்தலால் வீழ்ந்தது என்ற வழி மரம் என்பதும், அம்பு தைத்தலால் வீழ்ந்தது. என்றவழி விலங்கு என்பதும் புலயிைனவாறு காண்க. இனி, இதனைத் தனிச் சூத்திரமாகக் கொள்ளாது வினை வேறு படாப் பல பொருளொரு சொல்லின் இலக்கண முணர்த் திய தொடராகக் கொண்டு பின்வரும் அடுத்த சூத்திரத்துடன் இயைத்துப் பொருளுரைப்பர் சேனவரையர். வினை வேறு படாப் பல பொருளொரு சொல் என வேறு நிற்பன இல்லை; வேறுபடு வினை முதலாயினவற்ருன் வேறுபடுவன தாமே பொது வினை கொண்டவழி வினே வேறுபடாப் பலபொருளொரு சொல்லாம் என்பது அறிவித்தற்கு ஒன்று வினை மருங்கின் ஒன்றித் தோன்றும் என்ருர் என்பது சேவைரையர் தரும் விளக்கமாகும். வேறுபடு வினையாகிய சிறப்பு வினையில்ை பொருள் விளங்கித் தோன்றும் பலபொரு ளொருசொல்லே பல பொருட்கும் பொதுவாகிய பொதுவினை கொண்டவழி விணே வேறுபடாப் பலபொரு ளொருசொல்லாம் என்பது இதனு ற் பெறப்படும் என்பர் சேனவரையர், டுடு. வினே வேறு படா அப் பலபொரு ளொருசொல் நினையுங் காலேக் கிளந்தாங் கியலும். இது, வினே வேறுபடாப் பலபொரு ளொருசொல்லாமாறு கூறுகின்றது. (இ-ள்) வினையான் வேறுபடாத பல பொருளொரு சொல் ஆராயுமிடத்து இன்னது இது என எடுத்துக் கூறப்பட்டு நடக்கும் எ-று.