பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/100

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ఖి; } தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

தொழாதனை கழிதல் ஒம்புதி. வில்லுமிழ் கடுங்கனை மூழ்கக் கேல்புன ற் சிறையின் விலங்கியோன் கல்லை எனவருவதால், அமரில் பட்ட பொருநர்க்குத் தமர் கல்நட்டு வழி படும் பழைய மரபு விளங்கும்.

“பாலுடை மருங்கில் பதுக் கை தேர்த்தி மகல் வகுத்துத் தொடுத்த செம்பூங் கண்ணி டிொடு அணிமயற் பீலி சூட்டிப் பெயர் பொறித் திணி நட் டனரே கல்லும்' எனும் 264-ஆம் புறப்பாட்டிலும் இறந்த மறவனுக்குப் பெயர் பொறித்துக் கல்நாட்டும் பண்டை வழக்கம் குறிக்கப்படுகின்றது.

சொல்லப்பட்ட எழுமூன்று துறைத்தே-கூறப்பட்ட ஆகோள் அல்லாத வெட்சிவகைத் துறைகள் இருபத்தொன்று ஆகும்.

(இதில் ஏகாரம் அசை-துறை ஒவ்வொன்றினொடும் வரும் உம்மை எண்ணும்மை)

ஆய்வுரை

நூ ற்பா டு

குறிஞ்சிப் புறனாகிய நிரைகவர்தல், நிரை மீட்டல் என்னும் இரு பகுதிகளுள் நின்று கவர்தற்பகுதியாகிய வெட்சித்துறைகளை மேலைச் சூத்திரத்து விரித்துக்கூறிய தொல்காப்பியனார், நிரை மீட்டற் பகுதியாகிய கரந்தைத் துறைகளையும், புறத்திணை எல்லாவற்றுக்கும் பொதுவாக வுரிய மறத்துறைகளையும், மறத் துறைகளை நிறைவேற்றி உயிர்துறந்த தெய்வநிலை பெற்ற வீரர் களின் பெயரும் பீடும் எழுதிக் கல் நிறுத்தி வழிபடும் முறையில் அமரர்ச் சுட்டிச் செய்யப்படும் பெருஞ்சிறப்புடைய புறத்துறை களையும் இச்சூத்திரத்து விரித்துரைக்கின்றார்.

(இ-ள்) குறிஞ்சி நிலத்தெய்வமாகிய சேயோனுக்குச் செய்யும் வெறி என்னும் வழிபாட்டினையறிந்து நாட்டு மக்களுக்கு நலம் புரியும் சிறப்பினையும் தெய்வத்திற்குப் பலியிடுதல் வேண்டும்’ என உயிர்க்கொலை கூறுதலின் வெம்மைதரும் வாயினையும் உடைய வேலன் என்பான், தன் வேந்தற்கு வெற்றி வேண்டித் தெய்வத்தைப் பரவிய காந்தளும், இருதிறப் படைகளும் மாறு கொண்டு போர்விளைக்கும் போர்க்களத்திலே இன்ன வேந்தன்