பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/102

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


శ్రీ ఓ. தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

பொருந்த இங்குச் சொல்லப்பட்ட இருபத்தொரு துறைகளை யுடையது குறிஞ்சிப் புறனாய் நிரைமீட்டற்பகுதியாகிய வெட்சி யாகும். என்று. இச்சூத்திரத்திலுள்ள எழுமூன்று துறைத்து’ என்னும் பயனிலைக்கு உரிய எழுவாயாக இரண்டாஞ் சூத்திரத்தி லுள்ள வெட்சிதானே என்பது இங்கு அதிகாரத்தால் வந்து இயைந்தது.

வெறியாட்டு என்ற துறை, நிரை கவர்வார்க்கும் நிரை மீட் பார்க்கும் பொதுப்படவுரியது என்பது,

“வெறியயர் சிறப்பின் வெவ் வாய் வேலன்

வெறியாட் உயர்ந்த காந்தளும்’ என நிரைகவர்தலாகிய வெட்சிக்கும் நிரைமீட்டலாகிய கரந்தைக் கும் உரிய வகையில் இதனை இடையே வைத்ததனால் உய்த் துணரப்படும். தொல்காப்பியனார் காந்தள் என்ற பெயராற் குறித்த வெறியாட்டு என்னும் இத்துறைக்கு,

வாலிழையோர் வினைமுடிய

வேலனொடு வெறியாடின்று' என வெட்சிப்படலத்தும்

தேங்கமழ் கோதை செம்ம லளி நினைந்

தாங்கத் நிலைமை யாய் அறியாமை

வேங்கையஞ் சிலம்ப ற்கு வெறியாடின்று”

எனப் பெருந்திணைப் படலத்தும் விளக்கங்கூறுவர் ஐயனாரி தனார். தொல்காப்பியனார் குறித்த வாடாவள்ளி என்ற துறைக்கு,

'பூண் முலை யார் மனமுருக

வேன் முருகற்கு வெறியாடின்று எனப் பாடாண்படலத்து விளக்கந்தருவர் ஐயனாரிதனார்.

தனது நாட்டிலுள்ள பசுக்களைப் பகைவேந்தனுடைய படை மறவர் களவிற் கவர்ந்து சென்றமையறிந்த மன்னன், தன் படை வீரர்களை அனுப்பி அப் பசுக்களை மீட்டுவருதற்கு உரிய செயல் முறைகள் நிரைகோடலாகிய போர்ச்செயலுடன் தொடர்புடை யனவாய் ஒருகாலத்தே உடனிகழ்வனவாதலின் நிரைமீட்டலாகிய செயலைக் கரந்தை எனத் தனித் திணையாக்காமல் நிரை கவர் தலும் நிரை மீட்டலுமாகிய வெட்சித்திணை என ஒரு தினை யாகவே கொண்டார் தொல்காப்பியனார். நிரை கவர்தலாகிய