பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/125

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புறத்திணையியல் நூற்பா-எ க0 டு

தடுத்துக்கொண் டழிந்தவர்களைத் தாஞ் சென்றும் பொருள் கொடுத்தும் வினாவியுந் தழுவிக்கோடலுடனே முற்கூறியவற் றைத் தொகுத்து:

படைதட் டழிவோர் என்று மாறுக’ தழிச்சுதல் தழிஞ்சி யாயிற்று: 'பொருகணை தழிச்சிய புண்டீர் மார்பின்" என்றாற் போல.

கழிபெருஞ் சிறப்பின் துறை பதின்மூன்றே-மிகப் பெருஞ் சிறப்பினையுடையவாகிய துறை பதின்மூன்றாம் என்றவாறு.

வென்றோர் விளக்கம் முதலிய மூன்றும் ஒழிந்தனவெல்லாம் இருவர்க்கும் பொதுவாய் வருமென்பது தோன்றக் கழிபெருஞ் சிறப்பென்றார்."

இனி இயங்குபடையரவமெனவே இயங்காத வின்ஞாணொலி முதலியனவுங் கொள்க.

கொற்றங்கொண்ட வேந்தனோடு எதிர்த்து நிற்றலாற்றாது தோல்வி ம்2 மன்னன் தனது தோல்வியை ஒத்துக்கொண்டு அதற்கு அடையாளமாகத் தி:ை செலுத்துதல் முறையாதலின், க்ொற்றவள்ளை' என்பதற்குத் தோற்ற கொற் றவன் கொடுக்கும் திறை என விளக்கம் தந்தார் இளம்பூரணர் . வேந்தன் து குறையாத வெற்றித் திறத்தினை வள்ளைப்பாட்டில் வைத்துப் போற்றும் நிலை யில் அவனொடு பொருது தோல்வியுற்ற வேந் தனது பெயரும் அவனது நாட்டின் அழிவும் ஒருங்கே குறிக்கப்பெறுதல் இயல்பாதலின் குன்றாச்சிறப்பிற் கொற்ற வள்ளை' என்பதற்கு, வேந்தனது குறையாத வெற்றிச் சிறப்பினாற் பகைவர் நாடழிதற்கிரங்கித் தோற்றோனை விளங்கக் கூறும் வள்ளைப்பாட்டு' என விளக்கந்தந்தார் நச்சினார்க்கினியர்.

16. அழிபடை தட்டோர் என்பதற்கு, எதிர்த்தோரை அழிக்கும் இயல்பின வாகிய கனை வேல் வாள் முதலிய படைக் கல்ன்களைத் தம்மிடத்தே தடுத்துக் கொண்டு புண்பட்டோராகிய தம் படைவீரர்கள் என நின்றவாறே பொருள் கொள்ளுதலே பொருத்தமுடையதாகும்.

17. வேந்தர் இருவரும் தத்தம் நாட்டின் எல்லைக்கண் எதிர்சென்று தங்குதல் வஞ்சி என வும், அவ்வளவிலமையாது மேற்சென்ற வேந்தன் பகைமன்னனது மதிலை வளைத்தலும் மதிலகத்து வேந்தன் தன் அரணைக் காத் துக்கொள்ளுதலும் உழிஞை எனவும், வஞ்சித்தினை க்குரியனவாக விரித்துரைக் கப்பட்ட பதின்மூன்று துறைகளில் வென்றோர் விளக்கம், தோற்றோர் தேய்வு, கொற்றவள்ள்ை என்னும் மூன்றும் நீங்கலாக எஞ்சிய பத்துத் துறைகளும் இரு திறந்தார்க்கும் பொதுவாய் வரும் எனவும் கூறுவர் நச்சினார்க்கினியர்.

வஞ்சிதானே, வேந்தனை வேந்தன் அஞ்சுதகத் தலைச்சென்று அடல்குறித் தன்று என மேற்சேறலை ஒருவனது தொழிலர்கவ்ே ஆசிரியர் கூறுதலானும், தென்றிசையென்றன் வஞ்சியொடு வடதிசை நின்றெதிருன்றிய நீள்பெருங் ஆ இ சியும்' எனச் செங்குட்டுவன் கூற்றாக அமைந்த சிலப்பதிகாரத் தொடரில் மேற் சேறலை ஒருவன் தொழிலாகவும் தன் மேல் வந்தோனைத் தடுத்து நிறுத்துதல்ை, மற்றொருவன் தொழிலாகவும் இளங்கோவடிகள் இருதிறமாகப் பகுத்துக் குறிப் பிடுதலானும், படையெடுத்துச்செல்லும் வேந்தன் தன்து நாட்டெல்லையளவில் அமையாது பகைவனது நிாட்டின் எல்லையளவும் படையுடன் மேற்சேறலே வஞ்சித்தினையாம் என வும், இவ்வாறன்றி இருபெரு வேந்தரும் ஒருவர் ஒருவ ரைப் பொருது வெற்றிகோடல் கருதித் தத்தம் நாட்டி ன் எல்லையளவும் சென்று தங்குதல், மைந்து பொருளாக விந்த வேந்தனைச் சென்று தலையழிக்குஞ் சிறப் பின த கிய தும் பைத் திணையின் தொடக்கமாயடங்கும் எனவும் கொள்ளுதலே தொல்காப்பியனார் கருத்துக்கு ஏற்புடையதாகும்.