பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/133

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புறத்திணையியல் நூற்பா எ & &リ.

னால் அளிக்கப்பெற்றுச் சிறப்பிக்கப்பெறுதல்; நெடுமொழி-மீக் கூற்று. வஞ்சினமும் ஆம்; மாராயம் பெற்ற நெடுமொழி' என்னும் இதனை மாராயவஞ்சி, நெடுமொழிவஞ்சி என இருதுறை களாகப் பகுத்துரைப்பர் ஐயனாரிதனார். வருவிசைப் புனலை: என்ற தொடர் விசைவருபுனலை என மொழி மாற்றியுரைக்கப் பட்டது. கற்சிறை கருங்கற்களால் அமைக்கப்பட்ட அணை. ஒருவன் தாங்கிய பெருமை ஒரு தனிநிலை எனப்படும். பொரு வரின்று உய்த்தலாவது பகைவேந்தரை ஒருபொருளாக மதியாது தன் படைகளை அவர்மேற் செலுத்துதல். பேராண்மைப்பக்கம் பேராண்பக்கம் எ ன் றா யி ற் று. பேராண்மை-தறுகண்மை. பேராண்மை யென்ப தறுகண், ஒன்றுற்றக்கால் ஊராண்மை மற்ற தன் எஃகு (திருக்குறள் 773) என்றார் தெய்வப்புலவரும். புறப் பொருள் வெண்பாமாலை கூறும் பேராண்வஞ்சி என்னுந்துறை பெயரளவில் இத்துறையினை அடியொற்றி யமைந்ததாகும். "பிண்டம் மேய பெருஞ்சோற்று நிலை'யாவது, வேந்தன் போர் தலைக்கொண்ட பிற்றைஞான்று போர்குறித்த படையாளருந் தானும் உடனுண்பான் போல்வதோர் முகமன் செய்தற்குப் பிண்டித்து வைத்த உண்டியைக் கொடுத்தல் மேயின பெருஞ் சோற்று நிலை என விளக்கங்கூறுவர் நச்சினார்க்கினியர். இவ் விளக்கம் அரும்படைத் தானை அமர்வேட்டுக் கலித்த, பெரும் படைத் தலைவர்க்குப் பெருஞ்சோறு வகுத்து (சிலப்-வஞ்சி. கால் கோள்-48, 49) எனவரும் சிலப்பதிகாரச் செய்தியை அடியொற்றி யமைந்துள்ளமை அறிந்து மகிழத்தகுவதாகும். வஞ்சித்திணை யில் இத்துறையினைப் பெருஞ்சோற்று நிலை எனவே எடுத் தாள்வர் ஐயனாரிதனார். வென்றோர் விளக்கமாவது, மேற் சென்று பொரும்போரில் வெற்றிபெற்றோர்க்கு உளதாகிய ஒளி யென்னும் புகழ் விளக்கம். இதனை நல்லிசை வஞ்சி' என்னுந் துறையாகக் கொள்வர் ஐயனாரிதனார். தோற்றோர் தேய்வு ஆவது, போரில் தோல்வியுற்றோர் புகழ் என்னும் ஒளி மழுங்கித் தேய்தல். புறப்பொருள் வெண்பாமாலையில் வரும் குறவஞ்சி என்னுந் துறை இதன்கண் அடங்கும். குன்றாச் சிறப்பிற் கொற்றவள்ளை என்பது, எக்காலத்தும் குறைதல் இல்லாத மன்ன வனது வென்றிச் சிறப்பினைப்போற்றி மகளிர் பாடும் உரற் பாட்டு. வள்ளை-உரற்பாட்டு. மன்னவனது கொற்றத்தினைப் போற்றிப்பாடும் பாடற்றுறையாதலின் இது கொற்றவள்ளை என்னும் பெயர்த்தாயிற்று. மன்னவன் கொற்றத்தினைப் புகழ்ந்து

–9–