பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/137

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புறத்திணையியல் நூற்பா- அ ā Ꮬ ©*

'தென்றிசை யென்றன் வஞ்சியொடு வடதிசை நின்றெதி ரூன்றிய நீள்பெருங் காஞ்சியும்’

(சிலப்.காட்சிக். 135-136) எனவரும் சிலப்பதிகாரத் தொடரால் இனிது புலனாதல் காண லாம். இதுபற்றியே எதிரூன்றல் காஞ்சி வஞ்சியுங்காஞ்சியும் தம்முள் மாறே என்னும் புறத்திணை மரபுபற்றிய தொடர்களும் வழக்கியவில் நிலைபெற்று வழங்குவனவாயின. வடநாட்டிற் படையெடுத்துச்சென்ற வஞ்சிவேந்தனாகிய செங்குட்டுவன் பகைப்புலம்புக்குப் பாசறையில் தங்கியிருந்தானாக, அந்நிலையில் அவனது படையினைத் தடுத்து நிறுத்தும் நோக்குடன் மேல்வந்த வடவர்சேனையைக் காஞ்சித்தானை (கால்கோள்.191) என இளங்கோவடிகள் குறிப்பிடுவதும் இப்புறத்திணை மரபு பற்றியே யாம்.

ஒருவன் தனது நாட்டின் மேற்படையெடுத்து வந்தால், நாடாள் வேந்தன் அவனை எதிர்சென்று தடுத்து நிறுத்தாது அவனது சேனை தனது மதிற்புறத்து வருமளவும் பொறுத்துத் தன் அரணினைக் காவல் செய்திருத்தல் உழிஞையின் பாற்படும். அது சேரமான் படையெடுத்து மேற்சென்றபோது தகடுரிடை அதிகமான் தங்கியிருந்ததாகும்’ என நச்சினார்க்கினியர் தரும் விளக்கம் தொல்காப்பியனார் கருத்துக்கும் தகடுர் யாத்திசை முதலிய இலக்கிய அமைதிக்கும் ஏற்புடையதேயாகும்.

8. உழிஞை தானே மருதத்துப் புறனே

முழுமுதல் அசனம் முற்றலும் கோடலும் ’அனைநெறி மாயிற்று ஆகும் என்ப." இளம் : இஃது உழிஞைத்திணையாமாறு உணர்த்துதல் துதலிற்று.

'இ-ள்.) உழிஞை மருதத்துப் புறன் - உழிஞை என்னும் புறத் திணை மருதம் என்னும் அகத்திணைக்குப் புறனாம், முழுமுதல்

1. உழிஞை - 4 - - - - - * * புறனே. (அ) முழுமுதல் * a r ж 4 4 4 9 а என்ப. (கo) என, இதனை இரண்டு குத்திரம் ஆக்குவர் (நிச்சி.)

(பாடம்) 2 பன்னெறி,

3.

‘முழுமுதல் அரணம் முற்றுதலும் அழித்தலுமாய் என வரும் இவ்வுரைத் தொடரை முழுமுதல் அரணம் முற்றுதலும் காத்தலுமாய்” எனத்திருத்திக் கொள் ளுதல் வேண்டும்.

'மருதத்துப்புறம் எயில் அழித்தலும் எயில்காத்தலும் என்னும் வேறுபாடு குறித்து உழிஞை எனவும் நொச்சி என வும் இரண்டு குறிபெறும்’ என இவ் வியலின் தொடக்கத்தே இளம்பூரணர் விளக்குதலால் அவ்விளக்கத்திற்கேற்ப "முற்றலும் காத்தலுமாய் வருந்தன்மைத்தாகிய இதறியை மரபாகவுடைத்து’ என உரையில் திருத்தஞ்செய்து கொள்வதே உரையாசிரியர் கருத்துக்கு சம்பு?தாகும.