பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/139

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புறத்திணையியல் நூற்பா- அ リ & &。

அந்நிலத்திருத்தலானும், ஒருவன் வாயில் வேண்டத் திறவாது அடைந்திருத்தல் ஒப்புமையானும், உள்ளிருந்தவனும் புறப்பட விரும்புதலானும், மருதம்போல இதற்கும் பெரும்பொழுது வரை வின்மையானுஞ், சிறுபொழுதினும் விடியற்காலமே போர்செய் தற்குக் காலமாதலானும் உழிஞை மருதத்திற்குப் புறனாயிற்று. மருதநிலத்து மதிலாதல்' 'அகநாடு புக்கவ ரருப்பம் வெளவி' யெனப் பாட்டிற் கூறியவாற்றானும், பிணங்குகதிர்க் கழனி நாப்ப னேமுற்-றுணங்குகல னாழியிற்றோன்று மோரெயின் மன்னன்’ (புறம்-ாடங்அ) என்றதனானுங் கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி யகத்தார், நிலைக்கெளிதா நீர தரண்' (திருக்குறள்-அரண்-டு) என்றதனாணுமுணர்க. மற்று எதிர்சென் றானை வஞ்சிவேந்தன் என்னுமெனின், அஃது இருவருந் தத்தம் எல்லைக்கண் எதிர்சென்றிருப்பரென்றலின் வஞ்சியாகாதாயிற்று.

(சு)

அ.(அ) முழுமுத லாண முற்றலுங் கோடலும் அனைநெறி மரபிற் றாகு மென்ப,

இது மேற்கூறிய உழிஞைத்திணையது பொதுவிலக்கணம் உணர்த்துகின்றது.

(இபள்.) முழுமுதல் அரணம்-வேற்றுவேந்தன் குலத்துக் கெல்லாம் எஞ்சாது முதலாய் வருகின்ற முழு அரணை, முற்றலும் கோடலும்-சென்ற வேந்தன் வளைத்தலும் இருந்த வேந்தன் கைக்கொண்டு காத்தலுமாகிய, அனைநெறி மரபிற்று ஆகும் என்ப- இரண்டு வழியாகிய இலக்கணத்தை உடைத்து அவ் வுழிஞைத்திணை என்று கூறுவர் புலவர் என்றவாறு.

முழு அரணாவது, மலையுங் காடும் நீருமல்லாத அகநாட்டுட் செய்த அருமதில்". அது வஞ்சனை பலவும் வாய்த்துத், தோட்டி முண் முதலியன பதித்த காவற்காடு புறஞ்சூழ்ந் ததனுள்ளே இடங்கர் முதலியன உள்ளுடைத்தாகிய கிடங்கு புறஞ்சூழ்ந்து, யவனர் இயற்றிய பல பொறிகளும் ஏனைய பொறிகளும் பதனமும் ஏப்புழை ஞாயிலும் ஏனைய பிறவும் அமைந்து, எழு வுஞ்சீப்பு முதலியவற்றால் வழுவின்றமைந்த வாயிற் கோபுரமும் பிறவெந்திரங்களும் பொருந்த இயற்றப்பட்டதாம்.'

i. மதுரைக் காஞ்சி.கசசு. (பாடம்) 2 செறலருமதில சேம வருமதில்’