பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ 2 - 5t தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

தோலது பெருக்கமும்-தோற்படையினது பெருமையும். அகத்தோன்’ செல்வமும்-அகத்தரசனது செல்வமும். அன்றி முரணிய புறத்தோன் அணங்கிய பக்கமும் - அன்றியும் பகைத்த புறத்தரசன் வருந்திய பக்கமும்,

திறற்பட ஒரு தான் மண்டிய குறுமையும். வலிபட ஒரு தானாகிச் சென்ற குற்றுழிஞையும்.

உடன்றோர் வருபகை பேணார் ஆரெயில்-வெகுண்டு வருகின்ற படையைப் பேணார் ஆரெயில் உழிஞையும்.

உளப்பட சொல்லப்பட்ட நாலிரு வகைத்து-உட்படக் கூறப் பட்ட எட்டு வகைத்து.

பதினெட்டு, இருபத்தொன்பது என்பார் மதம் விலக்கியமை தோன்றப் பெயர்த்துந் தொகை கூறினார்." இது கூறியது கூற லன்று; தொகை." (30)

ஆ0 நச் : இது முற்கூறிய நாவிருதுறைக்கும் பெயரும் முறையுந் தொகையுங் கூறுகின்றது. -

(இ-ள்.) கொள்ளார் தேஎங் குறித்த கொற்றமும்-பகைவர் நாட்டினைத் தான் கொள்வதற்கு முன்னேயுங் கொண்டான் போல வேண்டியோர்க்குக் கொடுத்தலைக் குறித்த வெற்றியும்:

தன்னை இகழ்ந்தோரையுந் தான் இகழ்ந்தோரையும் கொள் ளாரென்ப.

1. தோற்படை-கிடுகுப்படை. 2. அகத்தோன்-நொச்சியான். புறத்தோன்-உழிஞை யான் . 3. மண்டுதல்-மிக்குச்செல்லுதல், 4. வாரெயில் 5. பதினெட்டு இருபத்தொன்பது என்பார் மதம் விலக்கியமை தோன்றப் பெயர்த்துந்தொகை கூறினார் எனவரும் இவ்வுரைத்தொடரில், பதினெட்டு’ என்பதனை நீக்கி விட்டு இருபத்தொன்பது என் பார் மதம் விலக்கியமை தோன்றப் பெயர்த்துந் தொகை கூறினார்; இது கூ ஜியது கூறலன்று; தொகை?? எனப்படித்தால் இளம்பூரணர் கருத்து இனிது புலனாகும்.

சூத்திரத்தில் இரு நால்வகைத்தே’ எனச் சுட்டிய ஆசிரியர், நா லிரு வகைத்தே என இச் சூத்தி த்திலும் மீண்டும் தொகை கூறுதல் கூறியது கூறல் என்னும் குற்றத்தின்பாற்படாதோ என்பது வினா: பன்னிருபடலமுடை யாரும் அதன்வழி நூல்செய்த ஐயனாரிதனாரும் கூறுமாறுபோன்று உழிஞைத் திணைக்குரிய துறைகள் இருபத்தொன்பது என்னுங்கொள்கையை விலக்கு தற் பொருட்டே உழிஞைத்தினை நாலிருவகைத் து? என மீண்டும் தொகை கூறப் பட்டது என்பது மேற்குறித்த வினாவுக்கு இளம் பூரணர் கூறும் விடையாகும்.

6. தன்னுடைய ஆற்றல் பெருமை முதலியவற்றையெண் ணித் தன்னை இறையென மதித்துத் தனது ஆணையையேற்று அடங்கியொழுகாதவரும், தன்னால் இகழப்பட்டாரும் ஆகிய பகைவர்க்குக் கொள் யார்? என்பது காரணப்