பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


12

ஆட்சிக்குழுவினர்க்கும் எனது உளமார்ந்த நன்றியினை அன்புடன் தெரிவித்துக்கொள்கின்றேன். எம் இரண்டாண்டுப் பணியின் பயனான நூல்கள் வெளிவரும் இச்சமயத்தில், அவை சிறப்புடன் வெளிவர உறுதுணை நல்கிவரும் துணைவேந்தர் பேராசிரியர் ஜே. இராமச்சந்திரன் அவர்கட்கும் என் உளமார்ந்த நன்றி உரிய தாகும.

தமிழியற்புலத்தின் பணிகள் இனிது நிகழ அவ்வப்பொழுது ஆவணபுரிந்துதவிய தமிழ்த்துறைத் தலைவரும் தமிழியல் துறை மற்றும் இந்திய மொழித்துறைகளின் இணைப்பாளரும் ஆகிய டாக்டர். இராம. பெரியகருப்பன் (தமிழண்ணல்) எம்.ஏ.,பி.எச்.டி. அவர்கட்கு எனது நன்றி என்றும் உரியதாகும். தொல்காப்பியப் பொருளதிகார உரை வளத்தினை வெளியிடுவதில் ஊக்கமும் உதவியும் நல்கிவரும் பல்கலைக்கழக நூற் பதிப்பாளரும் இணைப்பேராசிரியரும் ஆகிய டாக்டர் கதிர். மகாதேவன் எம்.ஏ.எம்.லிட்.,பி.எச்.டி அவர்கட்கும் இவ்வுரை வளப் பதிப்புக்கு உறுதுணைபுரிந்த தமிழியற்புலத்துக் கல்வெட்டுத் துறை ஆய்வாளர் பேராசிரியர் திரு. சி. கோவிந்தராசனார் அவர் கட்கும் எனது நன்றியுரியதாகும். இவ்வுரை வளப்பதிப்பின் கையெழுத்துப்படிகளை அயராது ஆர்வமுடன் தட்டச்சுச் செய் துதவிய திரு செல்வகணேசன், பி.சயி... நூலின் அச்சுப்படியினைத் திருத்தியுதவிய திரு. த. சோமசுந்தரம் எம்.ஏ., ஆகிய அன்பர் கட்கு என்னுடைய அன்பார்ந்த பாராட்டும் வாழ்த்தும் என்றும் உரியவாகும். இந்நூல் சென்னையில் அச்சேறியபோது அச்சுப்படி களைச் சீர்செய்த டாக்டர். சி. பாலசுப்பிரமணியன் அவர்கட்கு என்னுடைய நன்றியையும் பாராட்டையும் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

க. வெள்ளைவாரணன்