பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/162

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


さ リー தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

வகை நான் மூன்றே துறை என மொழிப - பன்னிரு வகைப் படும் உழிஞைத்துறை என்பர் புறநூற் புலவர்.

குறிப்பு :- இதில், மற்று எல்லாம் அசை. உழிஞைத் துறை என்பது கொண்ட பொருட்டொடர்பால் அவாய் நிலை யாற் கொள்ளப்பட்டது. புதுமையானும் என்பதில் ஆன் அசை.

ஆய்வுரை

நூற்பா. க.க.

இஃது உழிஞைத்திணைக்குரிய துறைகளை விரித்துக்கூறு கின்றது.

(இ.ஸ்) குடிமக்களைப் புறங்காத்தற்கு எடுத்த குடையினை யும் ஏந்திய வாளினையும் தனது ஆக்கங்கருதியும் பகைவரை வென்றழித்தல்வேண்டியும் புறவீடு விடுதலும், மதிலின் மீதிடு பலகையொடு பொருத்திச் செய்யப்பட்ட ஏணிமிசை நின்று ւ Ո)ւն தோர் அகத்தோர் ஆகிய இருதிறப்படைவீரரும் ஒருங்கே கலந்து நின்று பொருதலும், (புறத்தோன்) தன் படையினைச் செலுத்திக் புறமதிலிற் செய்யும்போர் இல்லையாம்படி (அகத்தோனை) வென்று உள் மதிலைக் கைப்பற்றி வளைத்துக்கொண்ட வினை முதிர்ச்சியும், அதனை எதிர்த்து வளைத்துக் கொண்ட அகத் தோன் விரும்பிய மதில்காவலாகிய நொச்சியும், அம்மதிலின் புறத் திருந்தோன் விரும்பிக் கைக்கொண்ட புதுக்கோளாகிய முற்று தலும், புறத்தோரும் அகத்தோரும் மதிற்புறத்து அகழின் இரு கரையும் பற்றி நீரிடைப் படர்ந்த பாசிபோன்று அக்கிடங்கின்கண் ஒதுங்கியுந் தூர்ந்தும் செய்யும் போரை விரும்பின பாசிநிலையும், அதுவன்றி ஊரகத்துப் போரை விரும்பின பாசி மறனும், இங்ங்ணம் இருதிறத்தார் போர்செய்தற்கு இடனாகிய மதிலின் கண்ணே வேந்தர் இருவருள் ஒருவர் ஒருவரைக்கொன்று அவரது முடிக்கலன் முதலியனகொண்டு இறந்த வேந்தன் பெயரால் வென்றவேந்தன் முடிபுனைந்து நீராடும் மங்கலமும், இருபெரு வேந்தருள் ஒருவர் ஒருவரை வென்று.ழி அங்கனம் வெல்லுதற்குக் கருவியாயமைந்த கொற்றவாளினைக் கொற்றவைமேல் நிறுத்தி நீராட்டுதலுடன் தொகைநிலையென்னுந் துறையொடு முற்கூறிய வற்றையுஞ் சேர்த்து உழிஞைத் திணைக்குரிய துறைகள் பன்னி ரண்டாம் என்று கூறுவர் புறத்திணை நூலார். எறு.

"முற்றிய அகத்தோன் வீழ்ந்த நொச்சியும் என்ற தொடர்க்கு, "முற்ற அகப்பட்ட அகத்தோன் வீழ்ந்த நொச்சியும்’ எனப்