பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14


தொல்காப்பியப்புறத்திணையியலிலுள்ள துறைகளாகப் புறப் பொருள் வெண்பாமாலையிற் காணப்படுவனவும், புறப்பொருள் வெண்பா மாலையிற் புதியனவாகக் காணப்படுவனவும் ஆகிய புறத்திணைத்துறைகள் இந்நூலின் பிற்சேர்க்கையில் அட்ட வணைப் படுத்துத் தரப்பெற்றுள்ளன.

புறத்திணைத்துறைகளுக்குரிய இலக்கியங்களாக உரையாசிரி யர்கள் காட்டியுள்ள உதாரணப்பாடல்கள் அடியளவில் மிக்கன. அவற்றை அவ்வாறே வெளியிடுவதாயின், நூலின் பக்கங்கள் மிகும், அச்சுத்தாள் விலையேறிய இக்காலத்தில் புத்தகத்தின் விலையும் பன்மடங்காக உயரும். எனவே உரையாசிரியர்களின் உரை வேறுபாடுகளை ஒப்புநோக்கியாராயும் நோக்குடன் வெளி யிடப்பெறும் இவ்வுரைவளப் பதிப்பில் உதாரணச் செய்யுட்களின் முதற்குறிப்பும் நூற்பெயரும் பாடலெண்ணுமட்டும் தரப் பெற்றன. உரையாசிரியர்கள் உதாரணப்பாடல்களின் தொடர் களையெடுத்துக் காட்டி விளக்கந்தரும் இடங்களில் அப்பாடல்கள் உரையிலுள்ளவாறு முழுவதும் வெளியிடப்பெற்றுள்ளன.

இந்நூல் வரிசைகள். தமிழியற்புலத்தினர் செய்துமுடித்த ஆய்வுப்பணிகளின் பயனாக வெளிவருவன. இவை தொடர்ந்து நிகழ்தற்கும் வெளிவருதற்கும் உறுதுணையாய் விளங்கிய முன்னாள் துணைவேந்தர் டாக்டர் வ. சுப. மாணிக்கம், இந்நாள் துணைவேந்தர் பேராசிரியர் ஜே. இராமச்சந்திரன் ஆகியோர்க்கும் பல்கலைக் கழக ஆட்சிக்குழுவினர்க்கும் நன்றி கூறும் கடப்பாடு டையேன்.

இந்நூல்கள் தமிழ் முதுகலை மாணாக்கர்கட்கும் ஆய்வாளர் கட்கும் பெரிதும் பயன்படுவனவாதலின் கல்லூரி நூலகங்கள் தோறும் இப் பல்கலைக் கழக வெளியீடுகள் வாங்கி வைக்கப் பெறுதல் சிறப்புடையதாகும். தமிழ் ஆர்வலர் அனைவருக்கும் இவ்வுரை வளம் சிறந்த மன வளத்தைத் தமிழ் ஆய்வுவளத்தைப் பெருக்குமென்பது உறுதி.

க. வெள்ளைவாரணன்