பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/170

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கடு0 தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

தாகிய கூறுபாட்டோடே கூடி; இருபாற்பட்ட ஒரு சிறப்பின்றுஇரண்டு கூறுபட்ட ஒரு சிறப்பிலக்கணத்தையுடைத்து முற்கூறிய தும் பைத்திணை என்றவாறு.

எனவே முற்கூறியமைந்துபொருளாகப் பொருதலினும் நின்ற யாக்கை சிறத்தலும் இருநிலந் தீண்டா யாக்கை அதனிற் சிறத் தலுங் கூறினார். இது திணைசிறப்புக் கூறியது. மொய்த்தலி னென்றது, யாக்கை யற்றாட வேண்டுதலிற் கணையும் வேலு மன்றி வாள்முதலியன ஏதுவாகக்கொள்க. பிற்கூறியதற்கு அட்டை அற்றுழியும் ஊருமாறுபோல் அலிகனிற அற்றுழியும் உடம் பாடுதலின் அட்டையாட லெனவும் இதனைக் கூறுப.

இனி மேற்றுறை கூறுகின்றது மைந்துபொருளாக வந்ததுஞ் சென்றதுமாகிய பொது இலக்கணத்திற்கே என்றுணர்க. நிரை கொள்ளப்பட்டோன் பொருகளங் குறித்துப் போர்செய்தலும் அவன் களங்குறித்தது பொறாது நிரைகொண்டானுங் களங் குறித்துப் போர்செய்தலும் வெட்சிப்புறத்துத் தும்பையாம்.” வஞ்சியுள்ளும் விழுப்புண்பட்ட வீரரை நோக்கி வேந்தர்க்குப் பொறாமை நிகழ்ந்து துறக்கம் வேண்டுழி நிகழ்ந்த தும்பையும் வஞ்சிப்புறத்துத் தும்பையாம்." முற்றப்பட்டோனை முற்று விடுத்தற்கு வேறொரு வேந்தன் வந்துழி, அவன் புறம்போந்து களங்குறித்துப் போர்செய்யக் கருதுதலும், அவன்களங்குறித்துழிப் புறத்தோனும் களங்குறித்துப் போர்செய்யக் கருதுதலும் உழிஞைப்புறத்துத்தும்பையாம். இவையெல்லாம் மண்ணசையும்

1. உடம்பு அறுபட்டு ஆடுதற்கு அம்பும் வேலும் அன்றி வாள் முதலிய ப ை. க்கலன்கள் உடம் பிற் செறிதலும் காரணமாகக் கொள்க.

அலீகன் என்பது நீரில் வாழும் அட்டை என்னும் சிற்றுயிர். அறுதல் - அறுபட்டுத் துண்டாதல், தலே அறுபட்ட நிலையிலும் உடம்பு ஆடுதலால் இதனை அட்டையாடல் எனவும் வழங்கு வர்.

2. வெட்சிப் புறத்துத் தும்பையாவது, நி ைகவர்தலும் நிரை மீட்டலு மாகிய வெட்சித்திண்ையொழுகலாறுகளைத் தொடக்கமாகக் கொண்டு இருதி றத் தாரும் ஒருகளத் துப் போர்செய்தல், நிரை கொள்ளப்பட்டோ னாகிய கரந்தை யான் பொருகளங்குறித்துப் போர்செய்தலும் அவன் களங்குறித்தது பொறாது நிரை கொண்டோன் களங்குறித்துப் பொருதலும் இதன் பால் அடங்கும்.

3. வஞ்சிப் புறத்துத் தும்பையாவது, பகைவர் மேற் படையெடுத்துச் செல்லு தலாகிய வஞ்சித் திணை யின் தொடக்கமாகப் போரில் விழுப்புண்பட்ட வீரரை நோக்கி வேந்தர்க்குப் பொறாமை நிகழ்ந்து போரால் விண்ணுலகடைதலை விரும்பிய நிலைமைக்கண் இரு திறத்தார்க்கும் இடையே ஒருகளத்து நிகழும் யோராகும்.

4. உழிஞைப் புறத்துத் தும்பையாவது, பகைவனால் தனது அரண் முற்றுகையிடப்பட்டு உள்ளேயடங்கியிருந்த வேந்தனைப் பகைவனது முற்றுகை யினின்றும் விடுவித்தற் பொருட்டு அகத்தோனுக்குத் துணையாக வேறோர் வேந்தன் வந்த விடத்து, மதிலுள் இருந்த வேந்தன் வெளியே வத்து களங் குறித்துப் போர் நிகழ்த்தக்கருதுதலும், அவன் களங்குறித்த நிலையிற் புறத் தோனும் களங்குறித்துப் போர் நிகழ்த் திக் கருதுதலும் ஆகும், -