பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/176

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கடு சு தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

அன்றி இருவர் தலைவர் த புதிபக்கமும்-அஃதல்லாமல் படை நின்று பொராநின்ற இருவரும் தம்முள் பொருது படுதலும்.

ஒருவன் ஒருவனை உடைபடை புக்கு கூழை தாங்கிய பெரு மையும்."ஒருவன் ஒருவனைக் கெடுபடையின்கண் புக்குக் கூழை தாங்கிய பெருமையும்.

படை அறுத்து பாழிகொள்ளும் ஏமமும்-"கருவியை அறுத்து மல்லினால் கொள்ளும் ஏமமும். (அத்தும் ஆனும் சாரியை.)

களிறு எறிந்து எதிர்ந்தோர் பாடும்-களிறு எறிந்து எதிர்ந் தோர் பாடும்.

களிற்றொடு பட்ட வேந்தனை அட்ட வேந்தன் வாளோர் ஆடும் அமலையும்-களிற்றுடன் போந்து மலைந்துபட்ட இறை வனை மிக்க வேந்தன் படையாளர் நெருங்கி மற்றவனைப் பாடும் பாட்டும்.

அமல்-நெருங்கல், அதனாலாய பாட்டுக்கு ஏற்புடைத் தாயிற்று.

வாள்வாய்த்து" இருபெரு வேந்தர் தாமும் சுற்றமும் ஒருவரும் ஒழியா தொகைநிலையும்- வாள்தொழில் முற்றி இரு பெருவேந்தர் தாமும் சுற்றமும் ஒருவரும் ஒழியாமல் பட்டபாடும். ('கண்‘ என்பது இடைச்சொல்.)

செரு அகத்து இறைவன் வீழ்வுறச் சினை இ’ ஒருவனை மண்டிய நல்லிசை நிலையும்-பொருகளத்துத் தன்வேந்தன் பட அது கண்டு கறுத்தெழுந்து படைத் தலைவன் வீரனொருவனை நெருங்கிப் பொருத ஒரு நற்புகழ் நிலைமையும்.

1. தபுதி- இறத்தல்.

2. உடைபடை-தோற்றுப்பின் னிடும் சேனை, கூழை-பின்னணிப்படை தான் ஒருவனாகவே வீரனொருவன் தான் தனித்துச் சென்று பின்னிடும் தன் சேனை யைப் பின் னிடாது தாங்கிக் கொண்டு பகைவர் படையை எதிர்த்து நிற்றலின் அவனது பேராற்றல் கூழை தாங்கிய பெருமை எனப்பட்டது கூழை தாங்கிய பெருமை: என்பது நச்சினார்க்கினியர் கொண்டபாடம்.

3. பாழி-வலி. ஈண்டு வீரனது மெய்வன்மையைக் குறித்து நின்றது. ஏமம்-பாதுகாப்பு.

4. பாடு-படுதல்3 இறத்தல்.

5. அமலை-வீரர் பலர் நெருங்கிப்பாடும் பாட்டு.

வாள் வாய்த்தலாவது, வாள் தொழிலில் முற்றுதல்: அஃதாவது வாளேந்திச் செய்யும் போர்த் தொழில்களைக் கடைபோகச் செய்து முடி ந் தல்.

6. தொகை நிலையாவது, வீரர் அனைவரும் கூட்டமாக இறந்துபடுதல்.

7. செரு-போர்க் களம், சினை இ’ என்பது சினம் என்னும் பெயரடியாகப் பிறந்த வினையெச்சம், சினை இ-சினந்து; வெகுண்டு,