பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/177

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புறத்திணையியல் நூற்பா கச கடு எ

பல படை ஒருவற்கு உடைதலின் அவன் ஒள்வாள் வீசிய நூழிலும்-'பல படை ஒருவற்குக் கெடுதலின் அவன் ஒள்ளிய வாள் வீசிய நூழிலும்

அது பலரைக் கொல்லுதல். (மற்று அசை1 'நாடுகெழு திருவிற் பசும்பூண் செழியன் பீடும் செம்மலும் அறியார் கூடிப் பொருதும் என்று தன்தலை வந்த புனைகழல் எழுவர் நல்வலம் அடங்க ஒருதா னாகிப் பொருதுகளத்து அடலே’’ (புறம். எசு) எனவும்,

'வள்ளை நீக்கி வயtன் முகந்து கொள்ளை சாற்றிய கொடுமுடி வலைஞர் வேழப் பழனத்து நூழில் ஆட்டு'

(மதுரைக் காஞ்சி-உடு டு-எ) எனவும் பல உயிரை ஒருவன் கொன்றதனை நூழில் என்றவாறு அறிக.

உளப்பட புல்லித்தோன்றும் பன்னிரு துறைத்து-"உட்படப் பொருந்தித் தோன்றும் பன்னிரு துறைகளையுடைத்து. (ஏகாரம் ஈற்றசை.) (கச) நச் : இது மைந்துபொருளாகிய தும்பைத்திணைக்குத் துறை இனைத்தென்கின்றது.

(இ-ள்.) தானை யானை குதிரை என்ற நோனார் உட்கும் மூவகை நிலையும்-தானைநிலை யானைநிலை குதிரைநிலை என்று சொல்லப்பட்ட போர்செய்தற்கு ஆற்றா அரசர் தலை பனிக்கும் மூன்று கூறுபாட்டின் கண்ணும்:

நோனார் உட்குவரெனவே நோன்றார் உட்காது நிற்பாரா யிற்று." அவர் போர்கண்டு சிறப்புச்செய்யுந் தேவரும் பிணந்தின்

1. நாழிலாவது, ஒருவன் பல்லுயிர்களையும் ஒருசேரக் கொன்று குவித்தல்,

2. புல்லித்தோன்றுதலாவது, போர்க்களத்து ஒன்றோடொன்று தொடர்பு படப் பொருந்தி நிகழ்தல்.

- பன்னிரு துறைத் து-பன்னிரண்டு துறைகளையுடையது தும்பைத்திணை 莎P*5。

3 ஆற்றாத வரை? 4. நோனார்-எதிரியின் படைவன்மையினைப் பொறுத்துக்கொண்டு நின்று பொருதல் ஆற்றாத அரசர். உட்குதல்-பணித்தல்; நடுங்குதல் நோனார் உட்குவர் எனவே நோன்றார் (போரிற் பகைவர் படைக்கலங்களை எதிரேற்றும் பொறுத்துப் பழகிய வீரர்கள்) அஞ்சாது எதிர் நிற்பர் என்பதாம்.