பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/178

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ககி.அ தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரை வளம்

பெண்டிரும் படையாளர் தாயரும் அவர் மனைவியருங் கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியருங் கண்டோரும் பிறரு மென்று கொள்க.

துறக்கம்புகு வேட்கையுடைமையிற் சாலாளை முற்கூறி, அதன் பின்னர் மதத்தாற் கதஞ்சிறந்து தானும் போர்செய்யும் யானையைக் கூறி, மதஞ்சிறவாமையிற் கதஞ்சிறவாத குதிரையை அதன்பிற் கூறினார். குதிரையானன்றித் தேர் தானே செல்லா மையிற் றேர்க்கு மறமின்றென்று அது கூறாராயினார்."

நிலை யொன்னாது வகை யென்றதனான் அம்மூன்று நிலையுந் தாமே மறஞ்சிறப்பப் பொருதுவீழ்தலும், அரசனே வலிற் றானை பொருது வீழ்தலும், யானையுங் குதிரையும் ஊர்ந்தாரேவலிற் பொருதலும், படையாளர் ஒருவரொருவர் நிலை கூறலும் அவர்க்கு உதவலுமென இப்பகுதியெல்லாங் கொள்க.

இனி இவை தாமே கறுவுகொண்டு பொருவுழித் தானை மறம் யானைமறங் குதிரைமற மென்று வெவ்வேறு பெயர்பெறு மென்று கொள்க."

இனித் தாயர் கூறுவன மூதின் முல்லையாம்; மனைவியர் கூறுவன இல்லாண் முல்லையாம்; கண்டோர் கூறுவன வல்லாண் முல்லையாம்; பாணர் கூறுவன பாண்டாட்டாம் என்க.

இவை கூறி ஏனைக் கூத்தர் முதலியோர் கூறுவன கூறார் மன ஞெகிழ்ந்து போவாரு முளர். அவை ஒரொரு துறையாக முதனுாற்கண் வழங்காமையானும் அவற்றிற்கு வரையறையின்மை யானும் இவர் தானைநிலை யென அடக்கினார். இச்சிறப்பான் இதனை முற்கூறினார். அத் தானை சூடிய பூக்கூறலும்,

1. தானை யானை குதிரை என்னும் முறைவைப்புக்கு நச்சினார்க்கினியர் காரணங் கூறுகின்றார். கானை-நிலத்தினின்று போர்புரியும் வீரர் தொகுதி. கதம்-வெகுளி. தானை, யானை, குதிரை, தேர் என்னும் நால்வகைச் சேனை களுள் தேர் என்பது குதிரையின் றிச் செல்லாமையால் தேர்க்கு (மறம் இன்று) வீர மில்லையென விலக்கித் தானை, யானை, குதிரை என்னும் மூவகைநிலையே கொண் டார் தொல்காப்பியனார் என்பது கருத்து,

புறப்பொருள் வெண்பாமாலை தும்பைப் படலத்தில் தானைமறம், யானை மறம், கு திரை மறம் என்னும் மூவகை மறமும் இம்முறையே முதற்கண் இடம் பெற்றுள்ளமை இங்கு ஒப்பு நோக்கத் தகுவதாகும்.

2 பெருவழி?

3 'புறப்பொருள் வெண்பாமாலை தும்பைப்படலம் , சு, எ பார்க்க.

4. மனநெகிழ்ந்து போ வாருமுளர் என்றது, பன்னிருபடலம் புறப்பொருள் வெண்பாமாலை ஆசிரியர்களை அன்னோர் கூறும் மூதின் முல்லை இல்லாண் முல்லை, வல்லாண் முல்லை, பாண் பாட்டு முதலியன முத னு லில் தனித் தனித் துறைகளாக வழங்காமை பானும் அவற்றிற்கு இவ்வளவு என்னும் வரையறை இன்மையானும் ஆசிரியர் தெ ல்காப்பியனார் இவை போல்வன எ ல்லாவற்றையும் தானை நிலை என ஒரு துறை பாகவே அடக்கிக் கூறினார் என்பதாம்.