பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/181

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புறத்திணையியல் நூற்பாகச் 岛安岛

தாங்குதலே யன்றி அத் தலைவரிருவருந் தம்மிற்பொருது வீழ்தற் கண்ணும்;

பக்கமென்றதனான் அவரு ளொருவரொருவர் வீழ்தலுங் கொள்க.

இனித் தலைவரேயன்றிப் பிறரும் அவ்வாறு பொரினும் அதன்பாற் படுத்துக.

உடைபடை ஒருவன் புக்கு ஒருவனைக் கூழை தாங்கிய எருமையும்-தனது உடைந்த படைக்கண்ணே ஒரு படைத் தலைவன் சென்று நின்று அங்ங்னங் கெடுத்த மாற்றுவேந்தன் படைத்தலைவனை அவன் எதிர்கொண்டு நின்ற பின்னணியோடே தாங்கின. கடாப்போலச் சிறக்கணித்து நிற்கு நிலைமைக் கண்ணும்;

ஒருவனொருவனைத் தாங்கின எருமையென முடிக்க. படையறுத்துப் பாழிகொள்ளும் ஏமத்தானும்-கைப்படை யைப்போக்கி மெய்யாற் போர்செய்யும் மயக்கத்தின் கண்ணும்;

பாழி, வலி; இஃது ஆகுபெயர்.” களிறெறிந் தெதிர்ந்தோர் பாடும்-மாற்றுவேந்தன் ஊர்ந்து வந்த களிற்றைக் கையெறிந்தானுங் கடுக்கொண்டெதிர்ந் தானும் விலக்கி அவனையும் அக் களிற்றையும் போர்செய் தோர் பெருமைக் கண்ணும்;

இது களிறெறிந்தான் பெருமை கூறுதலின் யானைநிலையுள் அடங்காதாயிற்று.

களிற்றொடு பட்ட வேந்தனை அட்ட வேந்தன் வாளோர் ஆடும் அமலையும்"-அங்ஙனம் நின்று களிற்றொடுபட்ட வேந்த னைக் கொன்ற வேந்தன் படையாளர் வியந்து பட்டோனைச் சூழ்ந்து நின்று ஆடுந் திரட்சிக்கண்ணும்;

1. கூழை-பின்னணிப்படை . 2. சிறக்கணித்தல்-ஒருக்கணித்துப்பார்த்தல்.

பாழி-வலி; இங்கு வலிமையுடைய உடம்புக்கு ஆகி வருதலின் பண் பாகுபெயர்.

கையெறிந்தானும்-கையால் எறிந்தாயினும். கழுக்கொண்டெறிந்தானும்-கழுபடையைக்கொண்டு எறிந்தாயினும், கடு என்பதனைக் கழு: எனத் திருத்துக.பாடு-பெருமை.

5. அமலை என்பது, வீரர்கள் திரளாக நெருங்கி நின்று ஆடுங்கூத்து.

—12–