பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணையியல் நூற்பா கசு கஅக,

கொடுக்கின்றான் உவகைபற்றியுங், கொள்பொருளின் ஏற்றிழிவு பற்றியுந், தலை இடை கடையென்பனவுங் கொள்க.

இனி வேட்பித்தன்றித் தனக்கு ஒத்தினாற்கோடலுங் கொடுப் பித்துக் கோடலுந் தான் வேட்டற்குக் கோடலுந் தாயமின்றி இறந்தோர் பொருள்கோடலும் இழந்தோர் பொருள் கோடலும் அரசு கோடலுந் துரோணாசாரியனைப் போல்வார் படைக்கலங் காட்டிக் கோடலும் பிறவுங் கோடற்பகுதியாம்."

பார்ப்பியலென்னாது பக்கமென்றதனானே பார்ப்பார் ஏனை வருணத்துக்கட்கொண்ட பெண்பால்கட்டோன்றின வருணத் தார்க்குஞ் சிகையும் நூலும் உளவேனும் அவர் இவற்றிற்கெல் லாம் உரியரன்றிச் சிலதொழிற்கு உரியரென்பது கொள்க.

உதாரணம்,

'ஓதல் வேட்ட லவை பிறர்ச் செய்த லீத லேற்றலென் தாறுபுரிந் தொழுகு மறம்புரி யந்தணர் வழிமொழிந் தொழுகி.'

(عيسع - تطوق هرين)

இஃது அந்தணர்க்குக் கூறிய பொது.

'முறையோதி னன்றி முளரியோ னல்லன் மறையோதி னானிதுவே வாய்மை-யறிமினோ வீன்றாள் வயிற்றிருந்தே யெம்மறையு மோதினாள் சான்றான் மகனொருவன் றான்."

இஃது ஒதல். இனி ஒதற்சிறப்பும் ஒதினாற்கு உளதாஞ் சிறப்புங் கூறுதலுங் கொள்க.

1. ஒத்தினாற் கோடலாவது, மாணாக்கர்க்கு நூல்களைக்கற்பித்து அதனால் வரும்பொருளைக் கொள்ளுதல். கொடுப்பித்துக் கோடலாவது வேள்வி களில் தேவர்கட் கு அவி முதலியன கொடுக்கச் செய்து அங்ங்னம் புரோகி தனா யிருந்து வேட்டற்றொழிலாற்பெறும் பொருளைக்கொள்ளுதல். தான் வேட்டற்குக் கோடலாவது தானே வேள் வியொன்றினைச் செய்தற்பொருட்டு அரசர் முதலி யோர் பாற் பொருளைப் பெற்றுக்கொள்ளுதல். தாயமின்றி இறந்தோர் பொருள் கோடலுறுவது, இறந்தார்க்குரிய பொருளைப் பெறுதற்குரிய் சுற்றத்தார் இல்லாத நிலையில் அப்பொருளை ஏற்றுக்கொள்ளுதல். இழ்ந்தோர் பொருள் கோடலாவது பொருளுக்குரியோர் அப்பொருளை அரச தண்டம் முதலியவற்றால் இழந்தநிலை யில் அப்பொருளைப் பெற்றுக்கொள்ளுதல். அரசு கோடலாவது நாட்டிற்குரிமை யுடையோர் இதனை ஆளுக என ஆட்சியுரிமை கொடுத்தால் அதனை ஏற்றுக் கொள்ளுதல் படைக்கலங் காட்டிக் கோடலாவது, படைக்கலங்களாற் போர் செய்யும் முறையினைக் கற்பித்து அகசாற்பெறு: பொருளைக்கொள்ளுதல், இவையெல்லாம் பார்ப்பார் பொருள் கொள்ளும் முறையினைக் குறித்தனவாகும்.

2 முறையோ தினன் :