பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/213

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புறத்திணையியல் நூற்பா கசு கக்ங்.

கைகால் புருவங்கண் பாணி நடைதூக்குக் கொய்பூங்கொம் பன்னாள் குறிக்கொண்டு-பெய்பூப் படுகளிவண் டார்ப்பப் பயில்வளை நின் றாடுந் தொடுகழன் மன்னன் று.டி.'

(புறப்-வெ.மாலை-பெருந்-கள்) இஃது ஆடல்வென்றி.

"இன்கடுங் கள்ளி னாமூ ராங்கண் மைந்துடை மல்லன் மத வலி முருக்கி யொருகான் மார் பொதுங் கின்றே யொருகால் வருதார் தாங்கிப் பின்னொதுங் கின்றே நல்கினும் நல்கா னாயினும் வெல்போர்ப் போருந் தித்தன் காண்கதி லம்ம பசித்துப் பணைமுயலும் யானை போல *விருதலை யொசிய வெற்றிக் களம்புகு மள்ளர்க் கடந்தடு நிலையே. (புறம்-க.0) இது மல்வென்றி.

'கழகத் தியலுங் கவற்றி னிலையு மழகத் திருதுதலா ளாய்ந்து புழகத்துப் பாய வகையாற் பணிதம் பலவென்றா ளாய வகையு மறிந்து.' (புற-வெ-மாலை-ஒழிபு-கசு)

இது சூதுவென்றி.

அனைநிலை வகையோடு ஆங்கு எழுவகையில் தொகைநிலை பெற்றது” என்மனார் புலவர்-அக் கூறுபட்ட ஆறு பகுதியும் நிலைக்களமாக அவற்றுக்கண் தோன்றிய வேறுபட்ட கூறுபாட் டோடு முன்னைய ஆறுங் கூட்டி அவ்வெழுகற்றால் துறை աս திரண்ட தொகை பெற்றது அவ் வாகைத்திணை என்று கூறுவா ராசிரியர் என்றவாறு,

(பாடம்) 1 ஒருதலை யொசிய வொற்றி:

2. அனை நிலை வகை என்பதனைப் பார்ப்பனப்பக்கம் முதலாகப் பாலறி மரபிற் பொருநர் ஈறாக மேற்குறித்த ஆறுவகையோடும் தனித்தனி இயைத் துர்ைத்தால் ஆறிரண்டு பன்னிருவகையாம். அமர்குறித்த ஆறுவகிையினும் அடங்காமல் எஞ்சிய வெற்றித் தொழிற் கூறுபாடுகள் அனைத்திையும் அன்ன நிலைவகை என ஒருதொகுதியாக்தி ஆதனை ஏழாவது வகையாகக் கொள்ளு தலே தொல்காப்பியன்சர் கருத்தாமென்பது அனைநிலை வகையொடு ஆங்கு எழுவகையின் தொகைநிலை பெற்றது” என அவ்வாறிலும் வேறாகிய ஏழாவது வகையாகப் பிரித்துரைத்தலால் இனிது புலனாம்.

مس-14 سس