பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/215

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புறத்திணையியல் நூற்பா கசு ககூடு

ஐவகை மரபின் அரசர் பக்கமும்-ஐவேறு குடிவகையினரா யாளும் மன்னர் இறைமைத் திறமையின் சார்பாயும்; இருமூன்று மரபின் ஏனோர் பக்சமும்-அறுவேறு மரபினரான மற்றைய தமிழக மக்களின் சிறப்பியல்களின் சார்பாயும்; மறுவில் செய்தி மூவகைக் காலமும் நெறியின் ஆற்றிய அறிவன்தேயமும்-வழு வற்ற வகையால் நிகழ்ச்சிகளை வெயில் மழை பணியெனும் தன்மையால் வேறுபட்ட முக்காலத்திற்குமேல் முட்டின்றிக் கடை போக நடத்தி முடிக்கும் அறிஞன் திறல்சார்பாயும்; நாலிரு வழக்கிற் றாபதப் பக்கமும்-எட்டுவகையில் நோற்பார் நோன் பின் சார்பாயும்; பாலறிமரபில் பொருநர் கண்ணும்-அறத்தின் பாகுபாடறிந்த முறையாற் பொருவார் போர்த் திறத்தின் சார் பாயும்; (இங்கிதனை இரட்டுற மொழிதலாக்கி, ஒப்ப நடிப்பவர் பொருநுத் திறலையும் குறிப்பதாகக் கொள்ளுதலும் கூடும்: (பொருந்-ஒப்பு: போல நடித்தல்) அனைநிலைவகையொடு-அத் தன்மைய நிலையில் வேறலின்கூறாய் வீறு தரும் பிறவகை வினை விறற்றுறையுடனே ஆங்கெழு வகையிற் றொகை நிலை பெற்ற தென்மனார் புலவர்-ஏழுவகையாகத் தொகுக்கப்படும் தன்மை யுடையது (வகைத்திணை) என்பர் புறநூற் புலவர்.

குறிப்பு :- தொகைநிலை பெற்றது என்ற வினைக்கேற்ப 'வாகைத்திணை' எனும் எழுவாய் கொண்ட பொருட்டொடர் பால் முன்னைச் சூத்திரத்திலிருந்து கொள்ளப்பட்டது. ஆங்கு" உரையசை புலவர் என வாளா கூறினும், இடம் பொருட் பொருத்தம் நூற்போக்குகளுக்கேற்பப் புறநூற் புலவர் என உரை கூறப்பட்டது.

"அறுவகைப்பட்ட பார்ப்பனர் என்றதனால் தொல்காப்பியர் காலத்தில் தமிழகத்தில் பார்ப்பார் மரபால் அறுவேறு பிரிவுடை யார் என்பது தெளிவு. இதனையடுத்து அரசர் ஏனோர்களுக்கு மரபால் வகை எண் கூறப்படுதலின், பார்ப்பனரின் அறுவகையும்

1. தமிழகத்திற் பண்டைநாளில் வாழ்ந்த பார்ப்பார் மரபால் அறுவேறு பிரிவுடையோர் என்பதற்குத் தமிழ் நூல்களில் எத்தகைய குறிப்புமில்லை. ‘ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூன் மறப்பர்’ (திருக்குறள் சுேo) என்றாங்கு அவர்கள் அறுவகைப்பட்ட தொழிலுடையோராகவே தமிழ் நூல்களிற் பேசப்படு கின்றனர். அன்றியும் இங்கு எடுத்துரைக்கப்படும் வாகைத்திணை யென்பது, தத் தமக்குரிய தொழிற் கூறுகளை மிகு திப்பட வளர்த் தலையே சுட்டுவதாதலின் ஈண்டு அறுவகை ஐவகை இரு முன்று வகை எனக் குறிக்கப்பட்டன மக்களுக்குச் சிறப்பு வகையாற் கூறப்படும் தொழிற் கூறுகளேயாகும். பிற்காலத்திற் போன்று பிறப்புவகையாற் கூறப்படும் குலப்பகுப்பு என அவற்றைக் கொள்ளுதல் பொருந்தாது.