பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/216

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


శ్రీ శ్రీ శ్రీ தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

அவர்தம் மரபு பற்றியதேயாகும்; மரபுச்சொல் குடிவகை குல முறை வழக்காறுகளைக் குறிக்கும்.

இனி, ஆறு தொழிலுடைமையால் பார்ப்பார் அறுவேறு வகை யினராகாமை வெளிப்படை ஒதுவியாது ஒதும்வகையார், ஒதாது ஒதுவிக்கும் வகையார், என்ற முறையில் ஒவ்வொரு தொழில்வகை யால் பார்ப்பாரை வெவ்வேறு மரபினராய் வகுப்பது யாண்டும் கேட்கப் படாதது.

இன்னும் இருபிறப்பாளருள் ஆறுதொழிலில் பின்னோர்க் கின்றிப் பார்ப்பாருக்குச் சிறப்புரிமை(மூன்றே :- ஏற்றல், வேட் பித்தல், ஒதுவித்தல். இவை வீறு தரும் பெற்றியதன்றாதலின், வாகைவகை யாகா. கொடைக்கு மாறாகக் கொள்ளுதலும் உயிர்செகுத்துண்டு வேட்டலும், வேதனத்துக்கு ஒதுவித்தலும் வெற்றிக்குரிய வாகையாகத் தமிழர் கொள்ளார். அவை வாகை வகையாய்ப் பண்டைச் சான்றோர் பாடாமையானும், இங்கு கருதற்கில்லை எனவே, இக்காலப் பார்ப்பார்-எண்ணாயிரவர் - மூவாயிரத்தவர்-வடமர்-சோழியர்-என வெவ்வேறு மரபின ராதல்போல, முற்காலத்தமிழகத்தும் பார்ப்பார் மரபால் ஆறு வகை பிரிந்தவராதல் இயல்பு. இனி, அறுவகை வைதிக மத மரபாக அறுவகைப்பட்டவராதலும் கூடும். எனைத்து வகையா யினும், இங்கு மரபால் அறுவகையிற் பிரிவுடைய பார்ப்பார் பரிசு குறிப்பதல்லால், அவர் அனைவருக்கும் பொது வாகும் வினையால வரை அறுவகைப் படுத்தல் தொல்காப்பியர் கருத்தன்மை ஒருதலை. துவக்கத்தில் தென் தமிழ் வரைப்பில் வந்து புகுந்த வம்பப் பார்ப்பார் மிகச்சிலராவர். மரபாலன்னோர் அறுவகைய ராதல் அக்காலத்தனைவரு மறிந்த தொன்றாகலின் வகை விரியாது அதன் தொகை கூறப்பட்டது. யாவருமறிவதைக் கூறுதல் மிகையாதலின் இருசுடர், மூவேந்தர், நானிலம் என்புழி, சுடர்வகை வேந்தர் குடிவகை நிலவகைகளை விரித்தல் வேண் டாதது போல, இதற்குபின் ஐவகை மரபின் அரசர் - இரு மூன்று மரபின் ஏனோர்' என அனைவரும் அறிந்த அவர் மரபு வகை விரியாது தொகைஎண்ணாற் குறிப்பதுபோல, அக்காலம் யாவருமறிந்த பார்ப்பனர் மரபுவகை ஆறாதலின் எண்மட்டும் கூறப்பட்டது.

வேந்தர் தம் வாகைக்குரியவை போர்வென்றிகொடை செங் கோற்செவ்வி போல்வன. அதுவேபோல் ஏனைய தமிழ் மக்களுக்கு அவரவர் கொண்ட தவறறு தொழில் எல்லாம் வாகைக்குரிய