பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


త్థ: தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

நச்சினார்க்கினியம்:

இவ்வோத்து முற்கூறிய அகத்திணை ஏழற்கும் புறமாகிய புறத்திணையிலக்கணம் உணர்த்தினமையிற் புறத்திணையியலென் லும் பெயர்த்தாயிற்று. புறமாகிய திணையெனப் பண்புத் தொகையாம். அதனை முற்படக் கிளந்த (தொல்-பொ-அகத்-க) என்புழிப் பிற்படக் கிளந்தனவும் உளவெனத் தோற்றுவாய் செய்து போந்து, அவற்றது இலக்கணங்களும் பெயரும் முறையுந் தொகையும் வருகின்ற சூத்திரங்களால் திறப்படக்கிளப்பின் எனக் கூறலின், மேலதனோடு இயைபுடைத்தாயிற்று. இச் குத்திர முற்கூறிய குறிஞ்சித்தினைக்குப் புறன் வெட்சித்திணை என்பதுTஉம், அதுதான் இப் பகுதித்தென்பது உம் உணர்த்துத னுதலிற்று.”

( இ-ள்) அகத்திணை மருங்கின் அரில் தப உணர்ந்தோர் புறத்தினை இலக் னம் திறப்படக் கிளப்பின்-அகத்திணை யென்னும் பொருட்கட் பிணக்கற அறிந்தோர் கூறிய புறத்திணை யது இலக்கணத்தைக் கூறுபட ஆராய்ந்து கூறின் வெட்சிதானே குறிஞ்சியது புறனே-வெட்சியெனப்பட்ட புறத்தினை குறிஞ்சி யெனப்பட்ட அகத்திணைக்குப் புறனாம். உட்குவரத்தோன்றும் ஈரேழ் துறைத்தே அதுதான் அஞ்சுதகத்தோன்றும் பதினான்கு துறையினையுடைத்து, எ-று."

அகத்திணைக்கண் முதல் கரு வுரிப்பொருள் கூறிய குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் என்பனவற்றிற்கு வெட்சி வஞ்சி உழிஞை, தும்பையென்பன அவ்வவ் விலக்கணங்களோடு ஒருபுடை யொப்புமைபற்றிச் சார்புடையவாதலும் நிலமில்லாத பாலை பெருந்தினை கைக்கிளை யென்பனவற்றிற்கு வாகையுங் காஞ்சி

1. அகத்தினையியலின் தொடக்கத்தில் கைக்கிளை முதலாப் பெருந் தினையிறுவாய், முற்படக்கிளந்த எழுதினையென்ப? எனவமைந்த நூற்பாவில் அகத்தினை யேழினையும் முற்படக்கிள் ந்த எழுதினை என்றதனால், அவ்வெழு தினைகளின் புறத் தனவாய்ப் பிற்படக் கிளந்தனவாகிய புறத்திணை' ஏழுள’ என்பதனைக் குறிப்பினால் தோற்றுவாய் செய்து போந்த தொல் காப்பியனார், மேலே குறிப்பிற் பெறப்படவைத்த புறத்திணை விழினையும் இவ் வியலில் வகைபெற விளக்குகின்றார். ஆதலால் புறத்தினையியலாகிய இது, மேலை அகத்தினையியலுடன் தொடர்புடையதாய் அதனையடுத்து வைக்கப் பெற்றது என்பதாம்.

2. அரில்- பிணக்கம்; தத்தம் இயல்பினைத் தனித்த கணியே பிரித்துணர இயலாவாறு தம்முட் பின்னிக் கிடத்தல், தப~கெட. அரில் தயவு ணர்தல் ஆவது, ஐந்திரிபாகிய மயக்கம் கெடத் தெளிவாகவுனர்தல். திறப்படக் கிளத் தலாவது, வகைபெற ஆராய்ந்து கூறுதல். உட்குவரத் தோன்றுதலாவது, கண்டோர் அச்ச முற்று நடுங்கும்படி நிகழ்தல், -