பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/27

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ཉན་་་་་་་་་་་ தொல்காப்பியம்- பொருளதிகாரம்-உரைவளம்

பாரதியார்:

ஒழுக்கமொன்றே கருதற்குரிய விழுப்பொருளாகக் கொண் டவர் பழைய தமிழர். மக்களின் வாழ்க்கைச் செயலெல்லாம் திணையா (ஒழுக்கமா)யடங்கும். எல்லாச் சொற்களுக்கும் அவற்றின் பொருள்பற்றியே திணையும் பாலும் வகுக்கும் தமிழ் மரபு இதற்குச் சான்று பகரும். உயிரினும் ஒம்பப்படும்-ஒழுக்கம்’ பேணி, அதனை ஒம்பற்குரிய மக்கட்டன்மை சுட்டுவனமட்டே உயர்திணையெனவும், ஒழுக்கமே கருதொணாப் பிற எதனையும் குறிக்கும் சொற்களனைத்தும் அல்திணை - (திணையல்லாதன) எனவும், தொல்காப்பியர் போன்ற பண்டைத் தமிழ்ப் புலவர் வகுத்த முறை இப்பழைய தமிழ் மரபுபற்றி யெழுந்ததாகும். "தீதொரீஇ நன்றின்பா லுய்க்கும் அறிவுநெறி கடைப்பிடித் தொழுகாது, உருவத்தால் மக்களே போல்பவராயினும் மேவன செய்து திரியுங் கயவரையும், விரும்பியாங்கொழுகும் நரகரொடு தேவரையும், அறிவற்ற பிற அனைத்தையும் ஒருங்கே அல்திணை யாகக் கொண்டாண்ட பழந் தமிழ்மரபு உயர்வுள்ளும் தமிழர் ஒழுக்க நிலையையும் விழுப்பநோக்கையும் வலியுறுத்தும். மக்கள் வாழ்வில் தூய கற்புறுகாதல் கண்ணிய மனையற வொழுக்கம் பற்றிய அனைத்தும் அகமெனப்பட்டன. பிறர்தொடர்பின்றி யமையா இற்புறவாழ்வோ டியைபுடையவெல்லாம் புறமெனப் பட்டன. தனிச் சிறப்புடைய இத்தமிழ்மரபு பேணித் தொல் காப்பியர் தம்நூற் பொருட்பகுதியில், காதல் கண்ணிய அகத் திணையாமவற்றின் பொதுவியல்புகளைத் தொகுத்து அகத்திணை யியல் என்னும் பேரால் முதலிற் கூறினார். அவ்வகவொழுக்கின்

குரிய கூற்றுகளில் வைத்து விரித்துக் கூறிய தொல்காப்பியனார், தாம் எடுத்துக் கூறிய கூற்றுக்களேயன்றி அவை போன்று பரந்து பட்டுவரும் கூற்றுக்களையெல் லாம் பின்வருவோர் ஒரு நெறிப்படத் தொகுத் துப் பல்வேறு துறைகளாக வகை பெற அமைத்துக்கொள்ளும்படி செய்யுளுக்கு இன்றியமையாத உறுப்புகளுள் துறை என்பதனையும் ஒருறுப்பாகச் செய்யுளியலுள் குறித்துள்ளார். இவ்வாறு அகத் திணைக்குரிய துறைகளைப் பலபட விரித்துக் கூறிய ஆசிரியர், புறத்திணைக் குரிய துறைகளைப் பரந்துபட விரித்துக் கூறாது அவற்றையெல்லாந் தொகுத்துக் கூறும் வகையில் இலக்கணம் செய்துள்ளார். ஆயினும் அகத்தினையொழுகலாறு களைப் போலவே புறத்தினையொழுகலாறுகளும் பல்வேறு துறைகளாகப் பரந்து பட்டு விரியும் பொருட்பகுதிகளை உடையன என்பதனையுணர்த்து தற்குப் புறத் திணைப் பகுதிகட்கும் துறையென்பதனைப் பெயராகக் கொடுத்துள்ளார். அகப் பாடல்களில் அகத்தினைப் பொருட்பகுதிகள் பலவாயினும் ஒரு செய்யுளுள் பல பொருட்கூறுகள் கலந்து வரினும் அவை தனித் தனித் துறைகளாகவும் பல துறை களும் விரவிய ஒரு துறையாகவும் அமைத்துத் துறைப்படுத்துப் பொருள் கொள்ளு மாறுபோலவே புறப்பாடல்களிலும் புறத்தினைப் பொருட்பகுதிகள் பலவாய்த் தனித் தனித் துறைகளாகவும் பலதுறைகளும் விரவிய ஒரு துறையாகவும் கொண்டு துறைப்படுத்துப் பொருள் கொள்ளுதல் வேண்டும் என்பது மேற்குறித்த உ ை பகுதியால் இனிது புலனாம், - - - -