பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணை இயல்-நூற்பாக శస్

சிறப்பியல்களைக் களவு-கற்பு’ எனுங் கைகோளிரண்டன்கீசி வகுத்து விரிக்குமுன், பொருளை அகம்புறமென நிறுத்தமுறை யானே, பொருளிடையீடாய், ஒருவாறாகத் திணைகளுக்குத் தொடர்புடைய மற்றைப் புறவொழுக்கவியல்களையுஞ் சுட்வேண்டி அவற்றை இவ்வியலில் விளக்குகின்றார். ஆதலின் இது புறத்திணையியல் எனும் பெயர்கொண்டது.

காதலறவொழுக்கங்களைத் தொகுத்து ஏழு திணையாகக் கொண்டதற்கேற்ப, ம க் க ளி ன் புறவொழுக்கங்களையும்: 'மறனுடை மரபின் ஏழேயாகக் கொள்ளும் பழைய தமிழ் முறையைத் தழுவி வெட்சி முதலாப் பாடாண் ஈறாப் புறத்தினை ஏழும் அவற்றின் இயல்துறை வகைகளும் இப்புறத்திணையியலிற் கூறப்படுகின்றன. பழங்காலத்தில் ஆடவர்க்குரிய சிறந்த ' களான பெருமையும் உரனும் பெரிதும் மறத்தின் வீறாய' தலின், புறவொழுக்கமெல்லாம் அமர்கொள் மரபின் தினை களாயின. அவற்றை நிரலே முதலில் அகத்திணை ஒவ்வொன்றிற் கும் ஏற்புடைப் புறனாயமையும் திணை வகையும் அதன் பெயரும் குறித்தல், அதையடுத்துடனே அப்புறத்திணையியல் விளக்கல், பிறகு அதன் துறைவகை தொகுத்தல், என முத்திறம்பட முறை பிறழாமல் விளக்குவர் தொல்காப்பியர். அவ்வத் திணைத் தும்ை *ளின் தொகையெண் முதலிற் றிணைப்பெயரோடேனும், ஈற்றில் துறைவகையோடேனும் கூறப்பெறுகின்றது. எனவே ஒவ்வொரு புறத்திணைக்கும் குறைந்த அளவு மூன்றும், திணை துறைகளின் சிறப்பியல்புகள் பெருகுமிடத்து மூன்றின் மிக்கும் சூத்திரங்கள் கூறப்படுகின்றன.”

1. அமர்கொள் மரபின் திணை-போர்ச்செயலை மேற்கொள்ளும் இயல்பின தாகிய ஒழுகலாறு.

2. புறத்திணையிலக்கணம் கூற எடுத்துக்கொண்ட தொல்காப்பியனார், முதற் கண் இன்ன அகத்திணைக்குப் புறனாயமைந்தது இன்னதிணை என அகத்தினை யொடு புறத்திணைக்குரிய தொடர்பினை முதற்கண் சுட்டுவர். பின்னர் அப்புறத் திணையின் இலக்கணம் கூறுவர். அதன் பின் அப்புறத்திணையின் துறைகளை விரித்துக் கூறுவர். ஒவ்வொரு திணை யிலும் துறைகள் இவ்வளவு என்னும் தொகையெண் முதற்கண் திணையோடாவது ஈற்றில் துறை வகையோடாவது இயைத்துக் கூறப்படும். எனவே ஒவ்வொரு புறத்தினைக்கும் குறைந்தது மூன்று சூத்திரங்களும் திணையின் வகை துறைகளின் சிறப்பியல்களை விரித்துரைக்க வேண்டிய நிலையில் ஆன் றின் மிக்க சூத்திரங்களும் அமைதல் உண்டு. இன் வாறு நாவலர் பாரதியார் இப்புறத்தினையியலிலுள்ள சூத்திரங்களின் பொருளமைப் பினைப் பகுத்து விளக்குவர். இப்பகுப்புமுறை நச்சினார்க்கினியர் உரையைத் இழுவியதாகும்,