பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/275

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புறத்திணையியல் நூற்பா கக உடுதி

என முற்றுவினை பெய்து முடித்தலின் அது பிறர்கோள் கூறிய தாகும். காஞ்சித்துறை அப்பத்தே என்பது அவர் காலத்து ஒரு சாரார் கொள்கையாதலின், அவற்றைத் தொகுத்துத் தனிஎண் கொடுத்துப் பிரித்தார். அது தானுடன்பாடாப் பிறர்கோளெ னற்கு என்ப' எனப் படர்க்கை வினைமுற்றுப்பெய்து, பின் தம் துணிபு விளக்கி மற்றொரு பத்தும் சேர்த்துக் காஞ்சித்துறை இரு வகையாய் இருபதாமென முடித்தார். இனி முற்பத்தை ஈரைத் தாகும் எனப் பிரித்து நிறுத்தியதால் பின் கூறிய பத்தையும் பத்தெனத் தொகுத்துச் சுட்டியேனும், அல்லது முன் பத்தோடு கூட்டி எண்ணித் துறை இருபதெனச் சுட்டியேனும், இறுதியில் மொத்தத்தொகை எண் கூறுதல் வேண்டும். ஈற்றடி, துறை ஈரைந்தே' என்றேனும், அன்றித், 'துறை இருவகைத்தே' என் றேனும் முன் பாடம் இருந்து பின் அது சிதைந்து இருத்தல் கூடும் எனத் தோன்றுகிறது. இதில் பின்கறிய துறைபத்தும் துன்பநிலை குறிப்பதால் இவை விழுமவகையாதல் வெளிப்படை. அதனால் விழுப்ப வகையா முதற்கூறிய துறை வகை பத்தின் வேறாகும் பின்பத்தும் என்பது விளங்குகிறது. இத்தன்மை வேறுபாட்டால் இச்சூத்திரங்கூறும் காஞ்சித்துறை இருபதும் ஒரு படித்தாய் நிரல் பட எண்ணாமல் வகைக்குப் பத்தாய்ப் பிரித்துத் தொகுத்து இரு வகைப்படுமெனத் தெரிக்கப்பட்டன."

ஆய்வுரை

நூற்பா. க.க.

இது, காஞ்சித்திணையின் துறைகளை விரித்துரைக்கின்றது.

(இ-ள்) யாவராலும் தடுத்தற்கு அரிய கூற்றம் வரும் எனச் சான்றோர் சொல்லிய பெருங்காஞ்சியும், இளமையின் நீங்கி அறி வான் முதிர்ந்தோர் இளையராயினார்க்குத் தம் வாழ்க்கையிற் கண்ட உண்மைகளை எடுத்துக்காட்டி அறிவுறுத்திய முதுகாஞ்சி யும், வீரராயினார் தமக்குரிய பண்பாகிய மறத்தினை எண்ணிப் புண்பட்டுப் பழுதுற்ற தம்முடம்பினைத் தாமே கிழித்துக் கொண்டு இறத்தலாகிய மறக்காஞ்சியும், போரிற் புண்பட்டு வீழ்ந் தோனை மருந்திட்டுப் பாதுகாத்தற்குரியோர் போர்க்களத்தில்

1. இந் நூற்பாவில் மாற்றருங்கூற்றஞ் சாற்றிய பெருமை முதலாகக் கொண் டோன் தலையொடு முடிந்த நிலை ஈறாக ஈரைந்த கும் என்பு: என்றது, காஞ்சித் திணைக்குரிய விழுப்பவகைத் துறைகள க முன்னோர் கூறிய துறைகள் எனவும், ‘பூசல் மயக்கம் முதலாகக் காடு வாழ்த்து ஈறாகவுள்ள துறைகள் நிலையாமை குறிப்பின வாய்த் தொல்காப்பியனாரால் இணைத்துக் கூறப்பட்ட விழுவகைத் துறைகள் எனவும் நாவலர் பாரதி பார் பகுத்துணர்த்தினடிை பொருத்தமுடையதேயாகும்.