பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/276

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


உடு சு தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரை வளம்

இல்லா நிலையில் (அணங்குந்தொழிலுடைய) பேயே அவனைப் பாதுகாத்தலாகிய பேய்ப் பகுதியும், இத்தகைய பெருந்தன்மை யாளன் இறந்துபட்டனனே என உலகமக்கள் இரங்குதலாகிய மன்னைக்காஞ்சியும், இன்னவாறு செய்தலைத் தவறினேனாயின் இத்தன்மையேன் ஆகக் கடவேன் எனக் கூறும்அவனை (ப் பகைவ ராயினார்) அணுகுதற்குரிய வஞ்சினக் காஞ்சியும், (தன் கணவன் போரில் விழுப்புண்பட்டு வீழ்தலான்) இனிய நகை முகத்தாளாகிய மனைவி புண்பட்ட தன் கணவனைப் பேய்தீண்டி வருத்தாமற் காத்தலாகிய தொடாக்காஞ்சியும், உயிர் நீத்த தன் கணவனை உயிர் நீங்குமாறு செய்து அவனது உடம்பில் தைத்துள்ள வேற் படையினையே கைக்கொண்டு அவன்மனைவி தனது உயிரைப் போக்கிய ஆஞ்சிக் காஞ்சியும், ஆற்றலால் ஒத்து (க்குடிவரவால் மாறுபட்டுத் த் தம்மேல் போருக்கு வந்த வேந்தனொடு தொல் குடியிற்பிறந்தோர் தம் மகளைக் கொடுத்தற்கு அஞ்சிய மகட்பாற் காஞ்சியும், மணம் புரிந்து போரில் இறந்துபட்ட தன் கணவன் தலையொடு தன் கொங்கையையும் முகத்தையும் சேர்த்து அவன் மனைவி இறந்துபட்ட நிலையொடும் கூட்டி (க் காஞ்சித்திணைத் துறை) பத்தாகும் என்பர். போர்க்களத்தே பெரும்புகழுடையனாக இறந்த மைந்தனைச் சூழ்ந்துள்ள சுற்றத்தார் அவன் இறந்துபட்ட மைக்கு ஏங்கி அழுத பூசல் பகர்வார் ஒருவருமின்றி மயக்கமும் (தாம் உற்ற துயரத்தினை உசாவி ஆறுதல் பகர்வார் ஒருவரு மின்றித்) தாம் ஒருவராகவே தனித்திருந்து இரங்குதலாகிய பொறுத்தற்கரிய துயர்நிலையும், கணவனுடன் சென்ற தலைவி தன் கணவன் இறந்துபட உடனுயிர்துறந்த செயலைநோக்கி வழிச் செல்வோர் சொல்லிய மூதானந்தமும், வெம்மைமிக்க அரிய சுரத் தினகண்ணே தன் கணவனையிழந்து தனியாளாய் நின்று தலை மகள் வருந்திய பெரும் பிரிவுத்துயராகிய முதுபாலையும், இறந் தோரைக் குறித்து இறவாது எஞ்சியுள்ள ஏனையோர் செயலற்று வருந்திப் புலம்பிய கையறு நிலையும், மனைவியையிழந்து தனிமை யுற்ற கணவனது நிலையாகிய தபுதாரநிலையும், தன் காதல னாகிய கணவனையிழந்து தனியளாகியவள் உற்ற தாபதநிலை யும், கற்பின் தன்மையாகிய நன்மையையுடையவள் செறிந்த தீயிற்பாய்ந்து உயிர்விடத் துணிந்த நிலையில் சான்றோரை, தன்னைத் தீப்பாயாதவாறு தடுத்து விலக்கும் சான்றோரை நோக்கிக் கூறும் கூற்றாகிய மாலை நிலையும், போரில் மாய்ந்த பெருஞ்சிறப்புடைய மகனைப் பெற்றதாய் சாதற்கண் அவனைத் தேடியடைந்த தலைப்பொவ் நிலையும், இடம் அகன்று