பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணையியல் நூற்பா உச உகக்

இது காமஞ்சான்ற பெண்ணியலாள் அஃதுணரா ஆண்மகவை யன்பு செய்து பாராட்டும் பாடானா கும்.

இனி, காமஞ்சாலா இளமையோள்வயின் காளைப்பருவத் தலைவன் துயகாதல் பாடாணாதற்குச் செய்யுள் :

'வாருறு வணள சம்பால்’’ -கலி, டு அ இதில், காமஞ்சாலாச் சிறுமிபாற் புரைதிர் காதல் கூர்ந்த தலைவன் அவள் இளமையும் உயிர் வெளவும் எழிலும் பாராட்டு தலால், இது காதற் பாடாணாயிற்று.

இதற்கு நச்சினார்க்கினியர் கூறும் பொருள் பொருந்தாது. பிள்ளைத் தமிழ் போன்ற பிற்காலப் பிரபந்தப் பகுதிகளை முறிப் பதிச்சூத்திரம் என்பரவர். அது செய்யுளியலிலன்றி ஈண்டுக் கூறற் பாற்றன்மையானும், அத்தகைப் பிரபந்த வகைகள் தொல்காப் பியர் காலத்தின்மையானும், அது கருத்தன்மை வெளிப்படை. இளம்பூரணரவ்வாறு கொள்ளாமையறிக.

ஆய்வுரை

இதுவும் அது.

(இ-ள்) மக்கள் குழந்தையாக வளரும் பருவத்தும் காமப் பகுதியாகிய பாடாண்பாட்டுப் பாடப்பெறுதற்குரியதாகும்.

நூற்பா. உச.

இங்ஙனம் பாடப்பெறுதல் அவர் விளையாட்டு மகளிரொடு பொருந்திய நிலைமைக்கண்' என்பது இளம்பூரணர் தரும் உரை விளக்கமாகும். மருங்கு’ என்றதனான் மக்கட் குழவியாகிய ஒரு ஒருமருங்கே கொள்க; தெய்வக் குழவியின்மையின் இதனை மேலவற்றோடு ஒன்றாது வேறு கூறினார். தந்தையரிடத்தன்றி ஒருதிங்களைக் குழவியைப்பற்றிக் கடவுள் காக்க என்று கூறுத லானும், பாராட்டுமிடத்துச் செங்கீரையும் தாலும் சப்பாணியும் முத்தமும் வரவுரைத்தலும் அம்புலியுஞ் சிற்றிலும் சிறுதேரும் சிறு பறையும் எனப்பெயரிட்டு வழங்குதலானும்’ என நச்சினார்க் கினியர் தரும் விளக்கம் பிற்காலத்தெழுந்த பிள்ளைத் தமிழ் இலக் கியத்திற்கு இச்சூத்திரம் இல்க்கணமாதலை வற்புறுத்துவதாகும்.

'காமவுணர்வு குழவிக்கு இன்று எனினும் அக்குழவிமாட்டுத் தூய காதல் கொள்வார் அன்பின் தன்மைபற்றிய பாடாண் அக் குழவியர்மேற் சார்த்தி வருவதே இதிற்கூறப்படுவது' எனவும், பிள்ளைத் தமிழ்போன்ற, பிற்காலப் பிரபந்தப் பகுதிகளைக் குறிப்பது இச்சூத்திரம் என நச்சினார்க்கினியர் கூறும் பொருள் பொருந்தாது எனவும் கூறுவர்.நாவலர் பாரதியார். அவர் கருது