பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/318

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


S & శ9 தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

புகார். அதற்கு மாறாகத் தந்நெஞ்சிற் பிறரைப் புகுத்துவர்

பெண்டிரெனும் புலனெறியைத் தொல்காப்பியர் நூலுட்காண்

முயல்வது "சுடருள் இருள் காண்ப தாகும்.

ஊர் குறித்தல் உரித்தாகும் பாடாண் பாட்டு வருமாறு :

'அணியிழையார்க் காணங் காகிமற் றந்நோய் தணிமருந்துத் தாமேயா மென்ப-மணிமிடையூண் இம்மென் முழவி னெயிற்பட்டின நாடன் செம்மல் சிலைபொருத தோள்.'

(சிறுபானுரையீற்றுப் பழைய பாட்டு.) "கூடற் பெருமானைக் கூடலார் கோமானைக் கூடப் பெறுவேனேற் கூடலென்று-கூடல் இழைப்பாள்போற் காட்டி யிழையா திருக்கும் பிழைப்பிற் பிழைபாக் கறிந்து.'

(முத்தொள்ளாயிரம் எங்)

இனித் தோற்றம் அதாவது குடிப்பிறப்பினுயர் வுரித்தாகும் பாடாண்பாட்டு :

முத்தொள்ளாயிரம் டுச, எள, கடு-ஆம் பாடல்களில் "கொற்கை' என்றுாரும் மாறன்’ என்றுயர் குடிப்பிறப்பாந் தோற்றமும் ஒருங்குவருதலும் காண்க. ஆய்வுரை

இதுவும் அது. (இ-ள்) (பாடாண்வகையாகிய காமப்பகுதி) ஊரின்கண் புலப்

பட்டுத் தோன்றுதலும் உரியதாகும்; (பாடல்சான்ற) புலனெறி வழக்கொடு பொருந்தி நடக்கும் கூறுபாட்டின்கண் எ-று.

நூற்பா. உடு.

'உரித்து என்னும் பயனிலைக்கு எழுவாயாகக் காமப்பகுதி' என்பது அதிகாரத்தால் வந்தியைந்தது. ஊரொடு-ஊரின் கண்; உருபு மயக்கம், தோற்றம்-தோன்றுதல்; புலனாதல்.

தன்னேரில்லாத்தலைவன் ஊரின்கண் உலாவந்து தோன்றுங் கால் அவனைக்கண்டு காதல்கொண்ட மகளிர் தமது காதலைப் புலப்படுத்துரைப்பதாகச் செய்யுள் செய்தலும் நாடகவழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல்சான்ற புலனெறி வழக்கொடு, பொருந்திய நிலைமைக்கண் புரைதீர்காமப்பகுதியாகவே கொள் ளப்படும் என்பது இந்நூற்பாவில் கருத்தாகும்.