பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/323

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புறத்திணையியல் நூற்பா 岛一% リー○ リー

என்றாராயிற்று. மெய்ப்பெயராவது ஒருவரது உடம்புடன் இயைத்து வழங்கப்பெறும் இயற்பெயர் என்பது ஆகும். இயற் பெயர் என்பது ஒருவரது மெய்க்கு இட்டு வழங்கும் பெயராதலின் மெய்ப்பெயரெனப்பட்டது.

இனி, அகத்திணைப்பாடல்களிற் கிளவித்தலைவர்களைக் குறித்துப் புனைந்துரையாக வழங்கும் பொதுப்பெயர்கள் போலன்றிப் புறத்திணைப்பாடல்களிற் பாட்டுடைத் தலைவர் களைக் குறித்து மெய்மையாக வைத்துரைக்கப்பெறும் இயற் பெயரும் நாடும் ஊரும் முதலாயினவுமே மெய்ப்பெயர்கள் எனவும் 'சுட்டியொருவர்ப்பெயர்கொளப் பெறார்' என அகத் திணையியலுட் கூறினமையின் கிளவித்தலைவர் பெயர் மெய்ப் பெயராகாது எனவும் "சுட்டியொருவர்ப் பெயர்கொள்ளும் பாடாண்திணைக்குரிய மெய்ப்பெயர்களிடமாகவும் அகத்திணை நிகழும்' என்பது இந்நூற்பாவின் கருத்தெனவும் இந்நூற்பாவில் "வழி" என்றது புறத்திணை தோன்றுதற்குரிய வழியாகிய அகத் திணை எனவும் கொள்வர் நச்சினார்க்கினியர். புறத்திணைக் குரிய மெய்ப்பெயர்களின் மருங்கே அகத்திணையை வைத்தார் முதல் நூலாசிரியர்' என்பது இந்நூற்பாவுக்கு அவர்கூறும் பொரு ளாகும். 'அரிபெய்சிலம்பின்" என்னும் (சு) அகப்பாட்டினுள் 'தித்தன்' எனப் பாட்டுடைத் தலைவன் பெயரும், பிண்ட நெல்லின்’ என நாடும், உறந்தை' என ஊரும், காவிரியாடினை' என யாறும் கூறிப் பின்னர் அகப்பொருள் நிகழ்ந்தவாறுங் கொள்க' என நச்சினார்க்கினியர் தரும் விளக்கம் பாட்டுடைத் தலைவரைப் போற்றியுரைக்கும் பாடாண்டிணையாகிய புறத் திணையின் வழியே அகத்தினைச் செய்யுட்கள் பாடப்பெறுவன வாயின என்னும் இலக்கிய வரலாற்றுண்மையினை இனிது புலப் படுத்தல் காணலாம்.

27. கொடி நிலை கந்தழி வள்ளி என்ற

வடு நீங்கு சிறப்பின் முதலன மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே.

இளம் : இது, சார்ந்துவருமாறு உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்) வடு நீங்கு சிறப்பின் கொடிநிலை கந்தழி வள்ளி என்ற முதலன மூன்றும் - குற்றம் தீர்ந்த சிறப்பினையுடைய கொடிநிலை முதலாகச் சொல்லப்பட்ட முற்பட்ட மூன்றும், கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வரும் - பாட்டுடைத் தலை