பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/358

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


荔.斑一森 தோல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

முருகாற்றுப்படையுட் புலம்பிரிந் துறையுஞ் சேவடி யெனக் கந்தழி கூறி, நின்னெஞ்சத் தின்னசை வாய்ப்பப் பெறுதி' யெனவுங் கூறி, அவனுறையும் இடங்களும் கூறி, ஆண்டுச் சென் றால் அவன் விழுமிய பெறலரும் பரிசி னல்கும்’ எனவுங் கூறி, ஆண்டுத் தான் பெற்ற பெருவளம் அவனும் பெறக் கூறியவாறு காண்க. இதனைப் புலவராற்றுப்படை என்று உய்த்துணர்ந்து பெயர் கூறுவார்க்கு முருகாற்றுப்படையென்னும் பெயரன்றி அப் பெயர் வழங்காமையான் மறுக்க, இனி முருகாற்றுப்படை யென்பதற்கு முருகன்பால் வீடு பெறுதற்குச் சமைந்தான் ஒரிர வலனை ஆற்றுப்படுத்ததென்பது பொருளாகக் கொள்க. இனிக் கூத்தர் முதலியோர் கூற்றாகச் செய்யுட் செய்யுங்கால் அவர்மேல் வைத்துரைப்பினன்றிப் புலனுடை மாந்தர் தாமே புலன்ெறி வழக்கஞ் செய்யாமை யுணர்க.

இனி இசைப்புலவர்க்கும் நாடகப்புலவர்க்கும் இங்ங்னங் கூற லமையாது; அவருள் உயர்ந்தோரல்லாதாரும் அத் தொழிற்குப் பெரும்பான்மையும் உரியராய் நடத்தலின்.

நாளணி செற்ற நீக்கிச் சிறந்த பிறந்த நாள்வயிற் பெரு ஆங்கலமும்-நாடொறுந் தான் மேற்கொள்ளுகின்ற செற்றங் களைக் கைவிட்டுச் சிறந்த தொழில்கள் பிறத்தற்குக் காரணமான நாளிடத்து நிகழும் வெள்ளணியும்;

அரசன் நாடோறும் தான் மேற்கொள்கின்ற செற்றமாவன சிறைசெய்தலுஞ் செருச்செய்தலுங் கொலைபுரிதலும் முதலியன. சிறந்த தொழில்களாவன, சிறைவிடுதலுஞ் செருவொழிதலுங் கொலையொழிதலும் இறைதவிர்த்தலுந் தானஞ்செய்தலும் வேண்டின கொடுத்தலும் பிறவுமாம்.

மங்கலவண்ணமாகிய வெள்ளணியும் அணிந்து எவ்வுயிர்க் கண்ணும் அருளே நிகழ்தலின் அதனை வெள்ளணி யென்ப. ஆகு பெயரான் அப்பொருள் கூறிய செய்யுளும் வெள்ளணியாயிற்று.

அதுபோன்று ஆத்ததாற்றுப்படை என் புழியும் கூத்தரை ஆற்றுப்படுத்தது. கூத்த ரால் ஆற்றுப்படுத்தப்பட்டது எனத் தடுமாறு தொழிலாக உருபு விரிக்கப்பெறாது * கூத்தரை ஆற்றுப்படுத்தது' என ஐயுருபு மட்டுமே விரிக்கப்பெறுதலின் தடுமாறு: தொழில் ஆகாமல்’ என்றார்.

1. இறை தவிர்தல்-அரசுக்குரிய வரியினை வாங்காது நீக்குதல்,