பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணை இயல்-நூற்பா க 盔、

பின்னூல்களில் மர பிறந்த மாறுபாடுகள் மலிவவாயின. பன்னிரு படலத்துள் தன்னுறு தொழிலே வேந்துறு தொழிலென் றன்ன விருவகைத்தே வெட்சி எனவும், அதைப் பின்பற்றி வென்றி வேந்தன் பணிப்பவும் பணிப்பின்றியும், சென்றிகன் முனை ஆதந் தன்று என வெண்பா மாலையிலும், வெட்சியை இருகூறுபடக் கூறினாராயினும், முன் வருகின்ற வஞ்சி, உழிஞை, தும்பை, முதலாயின (படைஎடுத்துச் செலவு, எயில்காத்தல், போர்செய்தல் என்பன) அரசர் மேலாய் இயன்று வருதலின், வேந்துறு தொழி லொழித்துத் தன்னுறு தொழிலெனத் தன்னாட்டும் பிறர் நாட்டும் களவில் ஆனிரை கோடலின், இவர் அரசரது ஆணையை நீங்கினா ராவர்; ஆதலால், அவர் அவ்வாறு கூறல் மிகைபடக் கூறலாம்: என இளம்பூரணரும் பிழைபட்ட பிற்காலக் கொள்கைகளைக் கடிதல் காண்டாம்.

இனி, முடிவேந்த ரல்லார் சிலரைப் புகழ்ந்துவரும் வெட்சிப் பாடாண் புறப்பாட்டுக்களைக் காட்டி, அவை மன்னர் பணிப் பின்றி ஆகோள் தன்னுறு தொழிலாய்க் கொள்வதற்கு மேற்கோள் என்பாருளர். அப்பாட்டுக்கள் குறுநில மன்னரைப் பற்றியவை. மன்பெறு மரபின் ஏனோ ராகிய குறுமன்னர்க்கு வேந்துவினை யியற்கை வேந்தனின் ஒரீஇய (அவ்) வேளோர் மருங்கினும் எய்திட னுடைத்து’ எனத் தொல்காப்பியரே கூறுகிறார். எனவே, இன்னோரைப் பாராட்டும் வெட்சிப்பாடாண் புறப்பாட்டுக்கள், ஒரு வகையாய் மன்னராவார்க்கு உறுதொழிலே கூறுவனவாம்; வேந்தன் பணிப்பின்றியும் மக்களில் யாரும் தன்னுறு தொழிலாக நிரைகவரும் தவறுக்கு இப்பாட்டுக்கள் மேற்கோளாகாமை வெளிப்படை.

ஆய்வுரை

இது வெட்சித் திணைக்குரிய இலக்கணம் உணர்த்துகின்றது. (இ-ஸ்) அரசனால் ஏவப்பட்ட படை மறவர், பகைவரது நாட்டிலே களவினாலே பசு நிரைகளைக் கைப்பற்றிக் கொணர்ந்து பாதுகாத்தலைப் பொருந்தியது மேற்குறித்த வெட்சித்திணை யாகும்.

பகைவர் நாட்டுப் பசுக் கூட்டங்களை நள்ளிரவிற் களவிற் கவர்ந்துகொண்டு வந்து தம் நாட்டிற் பாதுகாத்தலாகிய இவ் வெட்சி யொழுக்கம், நாடாள் வேந்தனது ஆணையின் வழியே நிகழ்தற்குரியதென்பதும் , மன்னனது ஆணையின்றி அவனுடைய