பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/49

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


#á { தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

பாலர் மேலும், முனைஞரும் மன்ன ரேவலின்றித் தாம் விரும்பி யாங்குப் போர் தொடங்கல் கூடாதாகலின், போர்த் தொடக்க மாம் ஆகோளும் வேந்தராணையில் வழி அவர்க்கொவ்வாத் தவறாகும். இத் தமிழ்ப் பேரறம் விளக்க வேண்டி ஆனிரை கொள்ள வேந்து வி லும் அவ்வாறு விடப்படுவார் முனைஞரே' யாதலும் வெட்சித் திணைக்கின்றியமையாமை சுட்டி வேந்துவிடு முனைஞர்" எனக் கூறப்பட்டது.

இன்னும், கவர விரும்பும் பிற நாட்டு நிரையும் போர் நிகழாக் காலத்து மன்னறக் காவல் துன்னித் தன்னிலத் துய்க்கப்பெற்றுழிக் கவரப்படுதல் முறை திறம்பி அறமழிப்பதாமாகலின், போர் துவக்குவோர் தமதல்லாப் பகை நிலத்தில் நிரைகவரற்பால ரெனற்கு வேற்றுப்புல'த்து என விளக்கப்பட்டது. போராகாமல் போர்க்குரியறிவிப்பாய் நிரைகொள்ளலே இத்திணை யாதலால், பகைப்படையின் எதிர்ப்பும் போரும் வேண்டாது பகைவர் நிலத்து அவரறியாமல் கரவில் கைப்பற்றும் முயற்சியே வெட்சியும், வெளிப் படையாய்ப் பகைவரை அறைகூவி நிரைகவர்தல் தும்பைப்பாற் கொண்டியுமாமென்பது தோன்றி களவின் எனக் கூறப்பட்டது. நிரைகவரக் கருதிச் சென்றோர் எதிர்பாராத காவலர் எதிர்ப்பிற் இடைந்து நிரை கவராதேனும் கவர்ந்தாங்கே மீட்க விட்டெனும் வாளாமீளல் ஆகோள் வெட்சியாகா தென்பதையும், மீட்க விடாமல் கவர்ந்து கொணர்ந்த நிரையைத் தம்மை ஏவிய வேந்தர் பால் ஊறின்றி யுய்ப்பது முனை ஞர் கடமையாதலையும் தெளிக்க வேண்டி ஆதந் தோம்பல் மேவற் றாகும் என விளக்கப்பட்டது. இக்கருத்த தானே, ஒம்புதலாவது மீளாமல் காத்தல் எனவும், போர்க்கு முந்துற நிரை கோடல் சிறந்த தெனவும், இச் குத்திரத்தின் கீழ் உரைக்குறிப்பாய் இளம்பூரணர் கூறுதலும் காண்க. இம் மாற்றருஞ் சால்புடை மரபுகள் போற்றாத பிற் காலத்தில், நிரை மீட்கும் முயற்சியை வெட்சியிடைக்காமல் கரந்தையென வேறு திணையாக்கியும், இவ்வெட்சியை வேந்தன் மேற்றாய் நிறுத்தாமல் தன்னுறு தொழிலே வேந்துறு தொழி வென்று அன்ன விருவகைத் தாக்கியும் தன்னாட்டை விலக்காமல் யாண்டும் பிறர் நிரை கவர்தல் வெட்சியாம் போலவும் முறை பிறழத் துறைகளைக் கூட்டியும் மாற்றியும், முந்துற நிரை கவர்ந்து அமரறிவித்துப் பின் பொருவதே போரறமென்பதை மறந்து போர்த் துவக்கத்தில் நிகழும் கொடிநிலை-கொள்ளவை நிலைவெறியாட்டு அன்ன கடவுட்பராவு நிலைகளை வெட்சிக்கண் போர்த்துறைகளாக எடுத்து நிறுத்தியும், இன்னும் பல்லாற்றாலும்