பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/61

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புறத்திணை இயல்-நூற்பாக JFS

மகிழத் தோன்றுதலும், கவர்ந்த பசுக்களைத் தம்முடைய ஊரிற் கொணர்ந்து நிறுத்துதலும், பகைப்புலத்திலிருந்து பசுநிரைகளைப் பற்றிக் கொணர்தலில் ஈடுபட்ட வீரர்களுக்கு அந்நிரைகளைப் பகுத்துக் கொடுத்தலும், தாம் மேற்கொண்ட வினையை முடித்த மகிழ்ச்சியாற் கள்ளுண்டு களித்தலும், இரவலர்க்குரிய பரிசிலாகப் பசுக்களைக் கொடுத்தலும் என வெட்சித் திணை பதினான்கு துறைகளையுடையதாகும்.

முன்சூத்திரத்திலுள்ள வெட்சிதானே என்னும் எழுவாயை அதிகாரத்தால் வருவித்து ஈரேழ் வகையிற்றாகும் என்னும் பயனிலையை முடித்துக் காட்டுவர் இளம்பூரணர்.

ஈரேழ்-பதினான்கு. வெட்சித்திணைக்குரிய துறைகளாக விரித்துரைக்கப்பட்ட இப்பதினான்கினையும் நிரைகவர்தல் நிரை மீட்டல் ஆகிய இருவேறு தொழில்களுக்கும் பொருந்தப் பொருள் கொண்டு இருபத்தெட்டுத்துறைகளாக விரித்து, அவற்றுக்குப் பெரும் பொருள் விளக்கம், தகடுர் யாத்திரை, புறநானூறு முதலியவற்றிலிருந்து எடுத்துக் காட்டுத் தந்து விளக்குவர் நச்சினார்க்கினியர். *

படை இயங்கு அரவம்-பகைவர் நாட்டு ஆனிரைகளைக் களவிற் கவர்ந்து கொள்ளுதல்வேண்டிச் சேனை புறப்பட்டுச் செல்லும் நிலையில் இயல்பாகவுளதாகும் ஆரவாரம், பாக்கம் சிற்றுார். விரிச்சி-நற்சொல்; அஃதாவது தாம் எண்ணிச் செல்லும் காரியம் இனிது நிறைவேறுமா என்பதனை முன்னரே அறிந்து கொள்ளுதல் வேண்டிக் குறிப்பிட்ட ஓரிடத்தில் நின்று கேட்கப் பெறும் நற்சொல். புடைகெட-பக்கம் கெட. புடை-பக்கம்; அயல் புடை என்னும் இச்சொல், அயல்வேந்தர் பக்கத்தாராகித் தம் நாட்டில் ஒற்றராய் உள்ளாரை உணர்த்தியது. பக்கத்தி லுள்ளாரைப் பக்கம் என்றது இடவாகுபெயர். புடைகெடப் பேராசிய செலவு என்றது, பக்கத்திலுள்ளாராகிய ஒற்றர் அறியாதவாறு மறைந்து செல்லுதலை. புடைகெட ஒற்றின் ஆகிய வேய் என்றது, பகைப்புலத்து ஒற்றர்கள் அறியாதவகை தம்முடைய ஒற்றர்களை அனுப்பிப் பகைவரது நாட்டின் நிலைமை களை ஒற்றி அறிதலை, வேய்-ஒற்றரால் ஒற்றி அறிதல் ஒற்றினா கிய வேய் என்புழி ஒற்றனாகிய என்னுந்தொடர் முதனிலை விளக்காய் நின்று ஒற்றினாகிய, வேய்ப்புறம் எனப் பின்னரும் சென்று இயைந்தது. வேய்ப்புறம் என முற்றின் ஆகிய புறத்து இறைவேய்க்கப்பட்ட (ஒற்றியறியப்பட்ட) இடத்தின் புறத்தினைச்