பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/65

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புறத்திணை இயல்-நூற்பாக - அடு

பொருள் : மறங்கடைக் கூட்டிய- மிடல் மலிவால் அடல் விருப்பின் விளைந்த, துடிநிலை முரசு பராவுதலும்; சிறந்த கொற்றவை நிலையும்-போருக்குச் சிறப்புரிமையுடைய கொற்ற வைக் கடவுளைப் பராவுதலும்; அத்தினைப் புறன்-(ஆகிய இவ் வெட்சிவகைகளும்) மேற்குறித்த குறிஞ்சித்திணைக்குப் புறனாகும்.

குறிப்பு :- மறங்கடைக் கூட்டிய' என அடை கொடுக்கப் பட்டது. இதுவும் மறனுடைய மரபாம் புறத்திணையெனற்கு இதன்மேல் நடத்தக் கடவது போரேயாதலானும், போர்த் தொடக்கமே வெட்சித் திணையாதலானும், ஆகோளைப் போலவே முரசு பரவுதலும், தொடங்கும் போரில் வெற்றி விளைக்கும்படி கொற்றவை பராவுதலும், போர்த் தொடக்க நிகழ்ச்சிளாமாத லானும், பின்னைய விரண்டும் முன்னையது போலவே வெட்சித் திணையாய்க் குறிஞ்சிக்குப் புறனாயமையும் பெற்றி இதிற் கூறப் பெற்றது. அகரச்சுட்டு 'புறன்' என்னுங் குறிப்பால் வெட்சிக்கு அகமாக முதற் சூத்திரத்திற் குறித்த குறிஞ்சியையே குறிக்கும். அகரச் சுட்டு வெட்சித் திணையைக் குறிப்பதாகக் கொண்டு, துடி நிலையும் கொற்றவை நிலையும் வெட்சிக்குப் புறனாம் என்பர் நச்சினார்க்கினியர். வெட்சியே புறனாதலானும் பொதுவியல் பாடாண் முதலியவற்றைப் புறப்புறமென வகுத்த வெண்பா மாலை முதலியவற்றைப் புறப்புறமென வகுத்த வெண்பாமாலை முதலிய பின்னுா லாகும். துடிநிலை கொற்றவை நிலை களைப் புறப் புறமென்னாது வெட்சியின் துறைகளாய் அடங்கினராத லானும், இச் சூத்திரத்தின் அகரச்சுட்டு வெட்சிக்கு அகமாகிய குறிஞ்சியையே குறிப்பது தேற்றம்.

முதற் சூத்திரத்தில், வெட்சியைக் கரவில் நிரைகவர்தல் என விளக்கியதால் அதிலமையாமல் வெட்சியின் பாற்பட்டுப் போர்த் துவக்கத்தில் நிகழ்பவற்றுள் இவ்விருபராவுதலின் இன்றியமையாமை பற்றி இவற்றை விதந்து கூறல் வேண்டப்பட்டது. முன் அகப் பகுதியில் உரிப்பொருள் ஐந்தில் புணர்வும் புணர்தனிமித்தமும் குறிஞ்சியென விளக்கியபின், அவ்விலக்கணத்தில் அமையாத கலந்த பொழுதை'யுங் காட்சியை யும் பிற சிலவற்றையும் புணர்லேபோல் குறிஞ்சிப்பாற்படுமெனக் குறித்து வேறு சூத்திரம் கூறினது போலவே அக்குறிஞ்சியின் புறமான வெட்சியிலக்கணத் திலடங்காத துடிநிலை, கொற்றவை நிலைகளும் போர்த்துவக்க மாம் வெட்சியின்பாற்படுமென்பதை இச்சூத்திரத்தால் விளங்க வைத்தார். - -