பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/9

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


6

பெறும் இளம்பூரணவடிகளுக்கேயுரியதாகும். இளம்பூரண அடி களைப் போலவே பேராசிரியர், சேனாவரையர், கல்லாடர் நச்சினார்க்கினியர், தெய்வச்சிலையார் முதலிய பெருமக்கள் சிலர் தொல்காப்பியத்தை வரன்முறையாகப் பயின்று நுண்பொருள் கண்டு உரைவரைந்துள்ளனர். எனினும் இவர்கள் எழுதியவுரை தொல்காப்பியம் முழுவதற்கும் காணப்படவில்லை. இளம்பூரண ரைப் போன்று பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் தொல்காப் .பியம் முழுவதற்கும் உரை வரைந்திருத்தல் வேண்டும் என்பது அவ்விருவருடைய உரைகளையும் கூர்ந்து நோக்குங்காற் புலனாகும். இளம்பூரணரும் பேராசிரியரும் பிறவுரையாசிரியர் உரைகளைத் தம்முரைகளிற் குறிப்பிடுதலால் அவ்விருவர் காலத் திற்கு முன்னும் தொல்காப்பியத்துக்குப் பல்வேறுரைகள் வழங்கி யிருத்தல் வேண்டும் எனக் கருத வேண்டியுளது.

தொல்காப்பிய வுரையாசிரியர்களாகிய இப்பெரியோர்கள் தமக்குப் பன்னுாருண்டுகள் முற்பட்டுத் தோன்றிய தொல்காப்பிய னார்காலத் தமிழர் நாகரிகத்தினையும் தமிழகத்தில் இடைக் காலத்தில் வந்து புகுந்த அயலவர் கலப்பினாலுளதாகிய பிற்காலச் சாதிவேற்றுமை பற்றிய சமுதாய மாற்றத்தினையும் வேறு பிரித்துணரும் வாய்ப்பினைப் பெற்றாரல்லர். எனினும் தமக்கு இயல்பாக அமைந்த கூர்த்தமதியினாலும் தொல்காப்பிய இலக்கணவரம்பினை நன்குணர்ந்து பாடப்பெற்ற பத்துப்பாட்டு எட்டுத்தொகை திருக்குறள் முதலிய பண்டைத் தமிழ் நூல்களைத் துறைபோகப் பயின்று உணர்ந்த தெளிவினாலும் தொல்காப்பி யத்திற்கு நூலாசிரியர் கருத்துணர்ந்து மெய்ப்பொருள் காணுந் திறத்திற் பெரிதும் வெற்றி பெற்றார்கள் என்பதிற் சிறிதும் ஐயமில்லை.

தமிழகம் தமிழ்மூவேந்தர் ஆட்சியையிழந்து அயலவராட்சிக் குட்பட்ட இடைக்காலத்தில், மக்களது வாழ்வியல் கல்வி நாகரிகம் கடவுள்வழிபாடு முதலிய எல்லாத் துறைகளிலும் அயலவரது மொழியும் சமுதாய அமைப்புமே மீதுார்ந்து நின்றமையால் இந்நாட்டிற் பரவிய அயலவர் நாகரிகம் தமிழ் மக்களது உலகப் பொதுமையுணர்வினையும் அவர்தம் தொன்மை நாகரிகத்தினை யும் எத்துணைக் கூர்த்த மதியாளரும் வேறு பிரித்துணர்ந்து கொள்ள இயலாதவாறு மறைத்துவிட்டதென்றே சொல்லலாம். இங்ஙனம் தமிழர் நாகரிகம் அயலவர் கூட்டுறவாற் பிரித்துணர வியலாத நிலையெய்திய பிற்காலத்திலே வாழ்ந்த உரையாசிரியர் கள் தம் காலச் சூழ்நிலையை யொட்டித் தொல்காப்பியத்துக்கு