பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/120

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


鑫空_ தொல்காப்பியம் - பொருளதிகாரம்

இதனுட் புலவுநாறியும் பூநாறியுந் தீதும் நன்றுமாகிய இறைச்சியாகிய உலக்கைகளால் தலைவனைப் பாடும் பாட்டோடே கலந்து கூறத் தகாத தெய்வத்தையும் பாடுவாமென்னும் பொருள் பயப்பச் செய்த இறைச்சியிற்பொருளே பயந்தவாறும் இரண் டுலக்கையானும் பயன்கொண்டாற்போல் ஐயன் பேர் பாடு தலா ற் பயன்கொள்ளாமையின் உள்ளுறையுவமமன்மையுங் காண்க. உள்ளுறையுவம மாயின்,'

'தன்பார்ப்புத் தின்னும் அன்பின் முதலையொடு

வெண்பூம் பொய்கைத்து அவனுர ரென்ப' (ஐங்குறு. 41)

என்றாற்போலத் தலைவன் கொடுமையுந் தலைவி பேதைமையும் உடனுவமங் கொள்ள நிற்கும். இதுபற்றித் தெரியுமோர்க்கே" யென்றார். உம்மை இறந்தது.தழி இயிற்று. (கசு)

உள்ளுறையுவமங்கொள்ளலாமாயினும், இவ்வாறு உய்த்துணர்ந்து கூறும் உள்ளு. .றைப்பொருள் இப்பாடலிற் பின்னர் க் கூறப்படும் பொருளொடு தொடர்ந்து முடியாது, "கன்றுதன் பயமுலைமாந்த முன்றில் தினை பிடியுண்ணும் பெருங்கல்கா ட என்ற அளவிலே யமைந்து தலைவனது கொடுமையிணைப்புலப் படுத்தும் குறிப்பளவில் கின்று விடுதலால் இஃது உள்ளுறையுவமையாகாது இறைச்சியிற் பிறக்கும் குறிப்புப் பொருளாயிற்று என்பதசம். இதன் கண் *கன்று தன் முலைமாந்த' என்ற தொடர், 'பிடிதன் கன்று பாலுண்ண முலைதந்தாற் போன்று தலைவனும் தன் கண் பிறர் பயன் கொள்ளச் செயற்பட்டான்' என உள்ளுறையுவமம் கொள்ளுதற்கு இடனின்றி, தலைவன் தன் கருமஞ்சிதையாமற் பார்த்துக் கொண்டான் , என்னும் குறிப்பளவிலேயே கின்று உள்ளுறையுவடிப்பொருளை முற்ற உணர்த்தாமை

காணலாம்.

1. வெளிப்படச் சொல்லப்பட்ட கருப்பொருள் கிகழ்ச்சிகளை உவமையாகக் கொண்டு அவற்றின் வாயிலாக மறைத்துக் கூறப்பட்ட பொருளையுய்த்துணரும்படி யமைவதே உள்ளுறையுவமமாகும். ஆகவே கருப்பொருள்களிற் கூறப்படும் ஒவ் வொரு கிகழ்ச்சியும் உள்ளுறுத்திக் கூறப்பட்ட உவமேயப்பொருளை யுய்த் துணர் தத்குரிய உவமக்குறிப்புக்களாகப் பயன்படும் ఇmణుa3ు அமைதல் வேண்டும். இக் கலித்தொகையில் புலால் மனம் காறும் யானைத் தந்தமும் பூவின் கறுமணம் வீசும் சந்தனமும் ஆகிய இருவகையுலக்கைகளும் முறையே தலைவனைப் பற்றிய பாடற்பொருள் வகையாகிய தீதும் கன்றும் குறித்தல் உள்ளுறைக்கு ஏற்றதே. ஆயினும் தாம் தம்முடைய பாடற்குரிய பொருளாகக் கொண்ட தலைவனைப் போற்றும் பாட்டுடன் கலந்து இவ்விடத்திற் பாடுதற்குரிய பொருளல்லாத தெய்வத் தையும் பாடும் இப்பாடலில் கன்றுக் தீதுமாகிய பயனைத்தாம் கொண்டாற்போன்று தெய்வத்தைப் பாடுதலாற் பயன்கொண்டகுறிப்பு இடம் பெற இஃது உள்ளுறை யுவமமாகாது இறைச்சியிற் பிறக்கும் குறிப்புப்பொருளேயாயிற்று. உள்ளுறையுவம மாயின் கருப்பொருள்களின் கிகழ்ச்சிகளின் ஒவ்வொரு கூறும் தாம் மறைத்துக்