பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/128

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


stre eò தொல்காப்பியம் - பொருளதிகாரம்

உங்0 கிழவோள் பிறள்குணம் இவையெனக் கூறிக்

கிழவோன் குறிப்பினை உணர்தற்கும் உரியள்.

இளம்பூரணம் :

என்-எனின். இது தலைமகட் குரியதோர் இலக்கண முணர்த்துதல் நுதலிற்று.

(இ- ள்.) தலைவி மற்றொருத்தி குணம் இத்தன்மையள் எனச்சொல்லித் தலைமகன் குறிப்பினை யறிதற்கு முரியள் என்ற வாறு.

இது கற்பியலுட் கூறியதற் கிலக்கணம்'

'கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளே

ஒள்ளிழை உயர் மணல் வீழ்ந்தென வெள்ளாங் குருகை வினவு வோளே.

3 *

என வரும். பிறவு மன்ன. (ங்க)

நச்சினார்க்கினியம் :

இஃது. எய்தியது ஒருமருங்கு மறுக்கின்றது : உள்ளத் துாட லின்றியும் பிறளொருத்தியைத் தலைவி புகழுமென்றலின்.”

(இ- ள், கிழவோள் பிறள் குணம் இவையெனக் கூறி. தலைவி வேறொரு தலைவியுடைய குணங்கள் இத் தன்மைய வென்று தலைவற்குக் கூறி ; கிழவோன் குறிப்பினை அறிதற்கும் உரியள். அவள் மாட்டு இவன் எத்தன்மையனா யிருக்கின்றானென்று தலைவன் குறிப்பினை உண்ர்தற்குமுரியள் (எ-று.)

பரத்தை யென்னாது பிறள்" என்றதனால் தலைவியே யாயிற்று : அன்றிப் பரத்தையாயின் ஊடலின்மை அறணன்

1. இது, தலைவி கூற்று நிகழும் இடங்களைத் தொகுத்துணர்த்தும்-கற் பியல் மு-ஆம் சூத்திரத்தினும் கூறப்பட்ட தலைவியின் கூற்றுவகைகளுள் ஒன்றற் குரிய இலக்கணம் கூறுவது என்பர் இளம்பூரணர், -

2. பிறள்" என்றது தன்னையொத்த மற்றொரு தலைவியை. விதுப்புறுத லாவது வேட்கை மிகுதியால் ஒன்றனையறிதற்கு உள்ளம் விரைதல் ,