பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|f jట్టి தொல்காப்பியம் . பொருளதிகாரம்

குடுமித் தலைய மன்ற நெடுமலை நாடன் ஊர்ந்த மாவே...' (ஐங்குறு. 202)

அன்னாய் வாழிவேண் டன்னை யுவக்காண் மாரிக் குன்றத்துக் காப்பா ளன்ன தூவலின் நனைந்த தொடலை ஒள்வாள் பாசி சூழ்ந்த பெருங்கழல் தண்பனி வைகிய வரிக்கச் சினனே.” (ஐங்குறு. 206)

இவை தோழி தலைவியை அன்னை யென்றன.

'எனக்கு மாகா தென்னைக்கு முதவாது’’ (குறுந், 27)

ஒரீஇயினள் ஒழுகும் என் ஐக்குப் பரியலென் மன்யான் பண்டொரு காலே...' (குறுந் 203)

இவை தலைவி தலைவனை என்ஐ யென்றன.

தோழி கூறியது வந்துழிக் காண்க. தலைவன் தலைவியை அன்னையெனக் கூறலும் உளதென்பாருமுளர் எழுத்தினுஞ் சொல்லினுமென்னாத முறையன்றிக் கூற்றானே புறத்திற்கும் இவை கொள்க."

என்னை மார்பிற் புண்ணுக்கு"

'என்னைக் கூரிஃதன்மை யானும்

என்னைக்கு நாடிஃ தன்மையானும்' (புறம், 85)

'என்.ஐ.முன் நில்லன் மின் தெவ்விர் பலரென் ஐ

முன்னின்று கன்னின் றவர்' (குறள். 781)

'என் ஐ மார்பிற் புண்ணும் வெய்ய' (qpis. 280)

என்பன கொள்க.

ஏனைய வந்துழிக் காண்க.

1. எழுத்தினும் சொல்லினும் என்னாது சொல்லினும் எழுத்தினும் என முறைமாறிக் கூறின மையால் புறத்திணையிலும் இச்சொற்கள் இவ்வாறு வழங்குதல் அமைத்துக் கொள்ளப்படும் என்பதாம்.