பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


$r

G一

பொருளியல் - நூற்பா சு

செயிர் தீர் சிறப்பின் என்றமையான் ஏனையோர் போலாது இவர் நால்வரும் ஒருநீர்மையர் என்று கொள்க. இதனாற் சொல்லி யது என்னை வெனின், இந்தால்வரும் ஆக்கமுங்கேடும் ஒருவர்மாட்டு வந்துழித்த மக்குற்றதுபோல் நினைப்பராதலான் ஒருவரையொருவர் இன்றியமைதாது ஒருயிர் போல்வர் எனவும், நாணமும் மடனும் நால்வர்க்கும் ஒக்கு மாகலான் அவலமாகிய வழியும் வருத்தம் ஒக்கும் எனவும் கூறியவாறு அதற்குச் செய்யுள்:

'இவளே நின்னல திலளே யாயுங்

குவளை உண் கண் இவளல திலளே யானும் ஆயிடை கேனே மாமலை நாட மறவா தீமே'

எனவரும், (+)

நச்சினார்க்கினியம் :

இது, தலைவிக்குத் தலைவனாற் பிறப்பதோர் வேறுபாடு

தோன்றியவழி அதனைப் பரிகரித்தற் குரியோர் இவரென வழு

வமைக்கின்றது. -

(இ, ள்) உயிரும் நாணும் மடனும் என்றிலை-உயிரும் நாணும் மடனுமென்று கூறப்பட்ட இவை மூன்றும், செயிர்தீர் சிறப்பின் நால்வர்க்கும் உரிய-குற்றந் தீர்ந்த தலைமையினை யுடைய நற்றாய்க்குஞ் செவிலிக்குத் தோழிக்குத் தலைவற்கு முரிய (எ-து.)"

உம்மை ஐயமாதலின் தலைவனை யொழிந்த மூவர்க்கு முரிய என்றாராயிற்று. என்றது தலைவன் இவற்றைக் களவிலுங் கற்பி லுங் காத்தலும் வரைவிடைவைத்துப் பிரிந்தும் பரத்தையிற் பிரித்துங் காவாமையுமுடைய னென்பது கூறிற்று. அவை எழு வகையால் (தொல்-பொருள் உ0.எ) தோழி அவற்றைக் காத்து

1. இங்குச் செ யிர் திர் சிறப்பின் கால்வர் என்பதற்குக் குற்றங் தீர்ந்த தலை மையினையுடைய கற்றாய் செவிலி தோழி தலைவன்’ என்னும் கால்வரும் என கச்சினார்க்கினியர் கூறும் பொருள் பொருத்தமுடையதாகத் தோன்றவில்லை காணும் மடனும் ஆகிய பெண்மைக்குனங்கள் தலைவனுக்குரியன வல்லாமையும் இங்குமனங்கொளத்தகுவதாகும்.

2. கால்வர்க்கும் என் புழி உம்மை முற்றும்மையாதலின் அதனை எச்சவும் மையாக்கி மூவர்க்கும் எனப்பொருள் கொள்ளுதற்கும் இடமுண்டு. நால்வர்க்கும் என் புழி உம்மை ஐயுற்றுத் துணியா நிலைமைக்கண் வந்ததன்றாகலின் இதனை

'ஐயவும்மை’ எனக் கூறுதல் ஏற்புடையதன்றாம்.