பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளியல்-நூற்பா கடி Jö版。

பட்டாங்கு கூறு தலென்னுங் கிளவி யோடே கூட்டி, அவ் எழுவகைய என்மனார் புலவர் - அத்தன்மைத் தாகிய ஏழு கூற்றையுடைய அறத் தொடு நிற்றலென்று கூறுவர் புலவர் (எ ~று.)

'அவ்வெழுவகைய’ என்றதனால் உண்மை செப்புங்கால் ஏனை ஆறுபொருளினுட் சில உடன் கூறி உண்மை செப்பலும், ஏனைய கூறுங்காலுந் தனித்தனி கூறாது இரண்டு மூன்றும் உடனே கூறுதலுங் கொள்க.

உ-ம்: "எல்லும் எல்லின் றசைவுபெரி துடையேன்

மெல்லிலைப் பரப்பின் விருந்துண்டு யானுமிக் கல்லென் சிறுகுடித் தங்கின்மற் றெவனோ எனமொழிந் தனனே யொருவன்’ (அகம், 119)

என்பது எளித்தல்.

': பகன் மா யந்திப் படுசுடரமையத்

தவன் மறை தேஎ நோக்கி மற்றிவன் மகனே தோழி என்றனள்’’ (அகம். 48)

என்பது ஏத்தல்,

'பூணாக முறத் தழி இப் போதந்தான்' (கலி. 39) என்பது வேட்கையுரைத்தல்.

'முருகயர்ந்து வந்த முதுவாய் வேல

சினவ லோம் புமதி வினவுத லுடையேன் பல்வே றுருவிற் சில்லவிழ் மடையொடு சிறு மறி கொன்றிவள் நறுதுதல் நீவி வணங்கினை கொடுத்தி யாயின் அணங்கிய விண்டோப் மாமலைச் சிலம்பன் ஒண்தார் அகலமும் உண்ணுமோ பலியே.” (குறுத், 362)

இது வேலனொடு கூறுதலுசாதல் கூறுதற்கண் உசாதலென விரிக்க.

'வாடாத சான்றோர் வாவெதிர் கொண்டிராய்க்

கோடாது நீர்கொடுப்பதல்லது-கோடா எழிலும் முலையும் இரண்டிற்கும் முந்நீர்ப் பொழிலும் விலையாமோ போந்து’’ (திணை, நாற். 15)