பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/67

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பொருளியல்-நூற்பா கசு இக

புள்ளிக் கள்வன் புனல்சேர், பொதுக்கம் போல் வள்ளுகிர் போழ்ந்தனவும் வாளெயி றுற்றனவும் ஒள்ளிதழ் சோர்ந்த நின் கண்ணியும் நல்லார் சிரறுபு சீறச் சிவந்தநின் மார்புத் தவறாதல் சாலாவோ கூறு' (கலி, 88) எனவும்,

குதிரையோ வீறியது” (கலி, 96}

எனவும் வருவனவும் பிறவும் 'இழிந்தோர் கூற்றை உயர்ந்தோர் கூறுவன; அவையும் அமைத்துக்கொள்க." (க எ}

ஆய்வுரை: இதுவும் தோழிக்கும் தலே விக கும் உரியதோர் திரம் உணர்த்துகின்றது.

(இ-ள) தலைவன் களவொழுக்கத்து நீட்டித்து ஒழுகிய நிலையில் மேற் குறித்த வண்ணம் வரைதல் வேட்கைப் பொருள் படக் குறிப்பாகச் சொல்லாது களவொழுக்கத்திலொழுகும் தலை வனது வேட்கையை மறுததுத் தலைவியை மணந்து கொள ளுதல் வேண்டும் என்னும் தம் உள்ள க்கருத்தினை அவ்விடத்து உள்ள வாறு எடுத்துரைத்தலும் தோழிக் குரியதோர் இயல்பாகும் எனக் கூறுவர் அறிஞர் எ-மு. •

இங்கு வேட்கை என்றது. களவொழுக்கத்தை மேற்கொண்டு ஒழுகுதலில் தலைவனுக்கு உளள விருப்பத்தினை மறுத் தலாவது, வழியருமை. காவல். அலர் முதலிய இடையூறுகளைக் கூறி இனி இக்களவொழுக்கினைத் தவிர்தல் வேண்டும் என்றல் . ஆங்குக் கிளந்துரைத்தல் என மாற்றிப் பொருள் உரைக்கப் பட்டது. கிளந்துரைத் தலாவது களவொழுக்கத்தை விடுத்துத தலைவியை விரைவில் மன நதுகொள ளு தல் வேண்டுமென்னும் தமது உள்ளக்கருததினை வெளிப்படக் கூறுதல் இனி, கிளத் தாங்கு, என்பதனைப் பட்டாங்கு’ என்றாற்போல ஒருசொல் லாகக் கொண்டு, கிளந் தாங்குரைத தல்-மனத்திற் கருதியதனை' மறையாது மனத்திற்பட்டவாறே வெளிப்படையாகக் கூறுதல் எனப்பொருளுரைத்தலும் பொருத்தமுடையதே.

1. இங்கு எடுத்துக்காட்டிய கலித்தொகை 88, 98-ஆம் பாடல்களில் காதலர் இருவருடைய உரையாடல்கள் அமைந்த பகுதிகள் இழிந்தோர் கூற்றை உயர்க்தோர் கூறுவன ஆகக் கொண்டு கூறிய கூற்றுக்களாதலின் அவற்றை யும் வழுவமைதியாக இப்பொருளியலில் அமைத்துக்கொள்க என்பது க ருத்து.