பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளியல்-நூற்பா உசு அக.

உகா. தாயத்தின் அடையா ஈயச் செல்லா

வினைவயின் தங்கா வீற்றுக் கொளம்படா எம்மென வரூஉங் கிழமைத் தோற்றம் அல்ல வாயினும் புல்லுவ உளவே.

இளம் பூரணம் :

என்-எனின். இதுவும் ஒருசார் மரபு வழுவமைத்தலை து கலிற்று.

(இ - ள். தாயத்தான் எய்துதலாவது தந்தைபொருள் மகற்குறுதல். ஈயச் சேறலாவது ஒருவன் கொடுப்ப ஒருவன் கோடல். வினை வயிற் றங்கலாவது உழவுமுதலியன வற்றான் வருதல். வீற்றுக்கொளப் படுதலாவது வேறுபடுத்திக் கோடல். அஃதாவது பகையினால் வந்தது கோடல். இந்நான்கினும் வரும் பொருளினது உரிமைத்தோற்ற மல்லவாயினும் பொருந்துவ உள என்றவாறு.

செய்யா என்னும் வினையெச்சம் வரூஉம் என்னும் பெய ரெச்சத்தொடு முடிந்தது. அன்றியும் செய்யா என்பதனைப் பெயரெச்ச எதிர்மறையாக்கி இந்நான்கிலும் வருந்தகவு இல்லாத பொருள் பொருளலவாயினும் எமதெனவரும் உரிமைத்தோற்றம் பொருந்துவ என்றவாறு.”

      • --see-ar essesse momens messano

1. அடையா, செல்லா, தங்கா, கொளப்படா என்பனவற்றைச் செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சமாகக் கொண்டு அவ்வெச்சத்தை ‘எம்மென வரூஉம் கிழமைத்தோற்றம்’ என்ற தொடரில் உள்ள வரூஉம்: என்னும் பெய ரெச் சத்தின் பகுதியாகிய வருதற்றொழிலொடு முடித்துப் பொருள் கொள்வர் இளம் பூரணர். தாயத்தின் அடைந்து ஈயச் சென்று வினை வயின் தங்கி வீற்றுக்கொள்ளப் பட்டு (இவ்வாறு நான்குதிறத்தானும்) எம்முடையன் என வரூஉம் பொருளினது உரி மைத் தோற்றம் (உடையன.) அல்லனவாயினும் உரிமையாதற்குப் பொருந்துவன

உள. எ-ாறு :

2. இவ்வாறன்றி, மேற்குறித்த செய்யா என்னும் வாய்பாட்டினை அடையாத, செல்லாத, தங்காத, கொளப்படாத என எதிர்மறைப் பெயரெச்சமாக்கி "இங்கான், கினும் வரும், தகவு இல்லாத எம்முடையன என வரும் பொருள் உரிமையுடைய பொருளல்லவாயினும் எமதெனவரூஉம் உரிமைத் தோற்றம் பொருந்துவனவுள: எனப்பொருள் கொள்ளுதலும் பொருந்தும் என்பதாம்,