பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

壽 தொல்காப்பியம்-மெய்ப்பாட்டியல்

அது முதனுாலைநோக்கிக் கூறியவாறு போலும்."

முப்பத்திரண்டாவன யாவையெனின், - ஒன்பதுசுவை யெனப்பட்டவற்றுள் உருத்திரமொழித் தொழிந்த எட்டனையுங் கூறுங்காற், சுவைக்கப்படும் பொருளும், அதனை நுகர்ந்த பொறியுணர்வும், அது மனத்துப்பட்டவழி உள்ளத்து நிசழுங் குறிப்புங், குறிப்புக்கள் பிறந்த உள்ளத்தாற் கண்ணிரரும்பலும் மெய்ம்மயிர் சிலிர்த்தலு முதலாக உடம்பின்கண்வரும் வேறு பாடாகிய சத்துவங்களுமென நான்காக்கி, அச்சுவை யெட்டோடுங்கூட்டி, ஒன்று நான்கு செய்து உறழ, முப்பத்திரண்டா மென்பது. எனவே, சுவைப்பொருளுஞ் சுவையுணர்வுங் குறிப்பும் விறலுமென நான்காயின. விறலெனினுஞ் சத்துவமெனினும் ஒக்கும்.

சுவைப்பொருளென்பன, அறுசுவைக்கு முதலாகிய வேம்புங் கடுவும் உப்பும் புளியும் மிளகும் கரும்பும் போல்வன. அவை யாமாறு: நகைச்சுவைக்குப் பொருளாவன ஆரியர் கூறுந் தமிழுங், குருடரும் முடிவகுஞ்செல்லுஞ் செலவும், பித்தருங் களியருஞ் சுற்றத்தாரை இகழ்ந்தாருங் குழவி கூறும் மழலையும் போல்வன. அச்சப்பொருளாவன,

'வள்ளெயிற் றரிமா வாள்வரி வேங்கை

முள்ளெயிற் தரவே முழங்கழற் செந்தீ

ஈற்றா மதமா ஏக பாதங்

கூற்றங் கோண்மா குன்றுறை யசுணம்' (கவி.ப.898) என்று சொல்லப்பட்டனபோல்வன. இவற்றைச் சுவை கோட லென்ப தென்னையெனின், நகையும் அச்சமு முதலாகிய உணர்வு முற்காலத்து உலகியலான் அறிவானொருவன் அவற்றுக்கு ஏது வாகிய பொருள்பிற கண்டவழித் தோன்றிய பொறியுணர்வுகள் அவ்வச்சுவை யெனப்படும். வேம்பென்னும் பொருளும் நாவென்பொறியுந் தலைப்பெய்துழியல்லது கைப்புச்சுவை பிறவாதது

4. இங்கு முதனூல் என்றது, முத்தமிழ்க்கும் இலக்கணங்கூறும் அகத்தியமாகிய

தொன் ஜாலினை. இவ்வுண்மை, "பிண்டத்தினையும் அடக்கிகிற்பது வேறுபிண்டமுள தென்பது. அது முதனூலாகிய அகத்தியமே போலும்; என்னை? அஃது இயற்றமிழ இசைத் தமிழ் சாடகத்தமிழ் என்னும் மூன்று பிண்டத்தினையும் அடக்கி கிற்றலின்' (தோல்-செய்யுள்-கனடி) எனவரும் பேராசிரியர் உரைப்பகுதியால் இனிது விளங்கும்.