பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

磷鹽- தொல்காப்பியம் - மெய்ப்பாட்டியல்

'யானே யீண்டையேனே என்னலனே

ஆனா நோயொடு காண லஃதே; துறைவன் தம்மூ ரானே : மறை அல. ரா.கி மன்றத் தஃதே'. (குறுந். 97)

இவ்வெண்பூதியார் குறும்பாட்டில் தலைவி அலர் நாணுதல் கூறப்படுதலறிக "அலர்யாங் கொழிவ? தோழி!' எனும் சேந்தன்கீரன் குறும்பாட்டுமதுவே.

(iv) இனி, 'கொடுப்பவை கோட'லாவது, தலைவன் அனுப்பும் தழையும் கண்ணியும் போன்ற காதற் கையுறை ய்ைத் தலைவி மறாதேற்றணிந்து மகிழ்தல், முன், அலரஞ்சித் தலைவன தருவன விலக்கிய தலைவி, அச்சமும் நானும் அலரா லழிய, அவன் தழையொடு கண்ணிதருவனகொண்டு பெரு மகிழுறுவது பெண்ணியல்பாகும்.

'மதங்கொல் கானவன் புனந்துளர்ந்து வித்திய

பிறங்குகுரல் இறடி காக்கும் புறந்தாழ் அஞ்சி லோதி அசையியற் கொடிச்சி திருந்திழை அல்குற்குப் பெருந்தழை யுதவிச் செயலை முழுமுத லொழிய, அயல

தரலை மாலை சூட்டி

ஏமுற் றன்றில் வழுங்க லுசரே' (குறுந் , 214

இதில், தலைவன் உதவிய கையுறைத் தழையைத் தல்ைவி ஏற்றணிந்துவர, அவள் ப்ொருட்டு அவன் தழைகொய்த அசோகு பட்டதெனப்படுதலால், தலைவன் கொடுப்பதும் தலைவி கோட லும் கூறப்படுதலறிக, நல்லாறெனினும்கொளல்த் தாதலின் தானொன்று வேண்டாத் தலைவி, பொருட்பொருட் -ன்றி, அன்புக்குறியாய்த் தலைவன் தருவன அவன்பொருட்டேற்பாள் என்பது குறிக்க இங்கு அவள் கொடுப்பன கோடலும் கூறப்

• التي ساسا مساس

தலைவன் உதவுங் காதற். கையுறைகளை அவன் ஈவன

கருவன் என்னாது கொடுப்பன என்றார், தருந்தலைவனுணர். வில் பெரும் தலைவியுயர்ந்தவளென்று எண்ணுவதியல்பாதலின்