பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பாட்டியல்-நூற்பா கன 證 盜。竇

S D S DD S DS S D S S S S S S S S S S S S S AAAA AAAA S

'அறியாய் கொல்லோ நீயே தெறுவர

நோக்குதொறும் பணிக்கும் நெஞ்சமோ டிவளே யாய்க்கறி வுறாலின் நின்னெதிர் நாணி மனைவயிற் பிரியலன் மன்னே யதற்கே நினைவிலள் இவளென வுரைத்தி புனைதார் மார்ப காண்டியோ வதுவே"

என்பது பகற்குறிக்கட் டலைமகளை இடத்துய்த்துவந்த தலை மகனை எதிர்ப்பட்டு நின்று தோழி வரைவுகடாயது. இதனுள் 'யாய்க்கறிவுறாலின்' என்பது தெரிந்துடம் படுதலென்பது: என்ன்ை? அவள் நோக்குதொறும் பணித்தலென்றறிவுறுத்தா ளென்றமையின் 'நின்னெதிர் நாணி என்பது திளைப்பு வினை மறுத்தல், என்னை: தமர்க்கு மறைத்தாள் இம்மறை யினையென்று கலைமகன் குறிக்குமென தாணி எதிர்ப்படாமை யின் , “மனை வயிற்பிரியலள்' என்பது கரத்திடத்தொழிதல்; 'புனைதார் மார்ப காண்டியோ வதுவே' என்பது கண்ட வழி உலத்தல்; என்னை? நிற்கண்டவழி துதலுந்தோளும் பசலை நீங்கியவாறு கண்டிலையோ வென்னும் குறிப்பினாற் கூறினயை யின். பிறவும் அன்ன. . (莎$7月

பாரதியார்

கருத்து :- இது காதலின் ஐந்தாங் கூறாவனவற்றை உணர்த்துகிறது.

பொருள் :- தெரிந்துடம்படுதல் முதலிய நான்கும் கூட்டம் பெறாமல் நைந்தழி தலைவியின் ஐந்தாங் காதற் கூறாமென்பர் புலவர்

குறிப்பு - (1) முற்படும் அலரால் இறசெறிவுறினும் தமர்மணமறுப்பினும் தனிமை ஆற்றாத் தலைமகள் தலைவனு டன் போக்குக்கு ஒருப்படவும். அன்றேல் தோழியால் அறத் தொடு நிற்க ஒருப்படவும் நேர் வள். இது தெரிந்து டம்படுத' லாகும். ஆய்ந்து புணர்ச்சிக் குடம்படுதல் இதன் பொருள் என்பர் இளம் பூரணர்; முன் இருகையும் எடுத்தாங்கே கூட். வுடன்பாடு குறித்தமையால், ஈண்டது மீண்டுங் கூறவேண் டர் தாகும்.