பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

露壽壽 தொல்காப்பியம் - மெய்ப்பாட்டியல்

என்பதும் அது.

2. துன்பத்துப் புலம்பல் என்பது, பிரிவாற்றாது துன்புறுங் காலை அவ்வாற்றாமை தலைமகற்கின்றித் தானே துன்புறு கின்றாளாகச் சொல்லுதல். அவை கூட்டத்தை வெறுத்த குறிப் பாயினும் அக்கூட்டத்திற்கே நிமித்தமாகும் ஆராய்ந்துணரி னென்றலாறு. அவை,

“நின்னுறு விழுமங் களைந்தோள்

தன்னுறு விழுமம் நீந்துமோ வெனவே' (அகம், 170)

என வரும்.

3. எதிர்பெய்து பரிதலென்பது, உருவு வெளிப்பாடு; அது தலைமகனையும் அவன் தேர்முதலாயினவற்றையுந் தன்னெதிர் பெய்துகொண்டு பரிந்து கையறுதல்; அது,

'வாரா தாயினும் வருவது போலச் செவிமுத லிசைக்கு மரவமொடு துயின்மறந் தனவாற் றோழியென் கண்ணே'(குறுந் 301)

என்புழி வாராதென்றுணர்த்தது இக்காலத்தாகலான் அதற்கு முன் இன்னவாறு பட்டதன்று என்றமையின் எதிர்பெய்து பரிதலாயிற்று.

4. ஏதமாய்தலென்பது, கூட்டத்திற்கு வரும் இடையூறுண் டென்று பலவும் ஆராய்தல். அது நொதுமலர் வரையக் கருது வர் கொல்லெனவும், பிரித்தோர் மறந்து இனிவாரார் .ெ கா ல் லெனவுந் தோன்றும் உள்ள நிகழ்ச்சி, அது,

'வாரார் கொல்லெனப் பருவருந்

தாரார் மார்பநீ தணந்த ஞான்றே' (அகம், 15.0)

என வரும்.

s.

பசியடநிற்ற லென்பது, பசிவருத்தவும் அ த ற் கு த் தளராது உணவு மறுத்தல்.