பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பாட்டியல் - நாள்பா உ.உ கீ.ஆ.க.

'படர்ந்தொளி பரந்துயிர் பருகு மாகமும்

தடத்தரு தாமரைத் தாளு மேயல், கடந்தரு மதங்கலும் கணிதல் யானைபோல் நடந்தது கிடந்ததென் னுள்ள நண்ணியே."

(கடபர் மிதிலைக்காட்சி. செய். 56, 57)

இவற்றில் தலைவன் வடிவு, வண்ணம், நடை முதலியவற்றித் கேற்ப எப்போருளாலும் ஒப்புக்கோடல் காண்க.

இனி, ஏற்புடைப் பொருள்களைத் தலைவன் தலைவிக்கு ஒப்புக்கோடலும் இத்துறையாகும்.

'நன்னீரை வாழி யணிச்சமே, நின்னினும்

மென்னிரள் யாம்வீழ் பவள்” (குறள். 1111)

"மலர்காணின் மையாத்தி நெஞ்சே! யிவள்கண்

பலர் காணும் பூவொக்கு மென்று' (குறள். 11:2}

'மதியு மடந்தை முகனும் அறியா

பதியிற் கலங்கிய மீன்' (குறள். 1118)

என வருபவையெல்லாம் தலைவன் தலைவிக்கு ஒ ப் பு ைம கோடலைக் குறிப்பன.

(18) ஒப்புவழி யுவத்தல்': இஃது அவ்வாறு ஒப்புமை கண்டவழி மகிழுங் காதலியல்பாம்.

பால்கொள லின்றிப் பகல்போன் முறைக்கொல்காக் கோல்செம்மை ஒத்தி பெரும!' (கலி. 86)

(19) உறுபெயர் கேட்டல்'; இது தலைவன் பீடார் பெரும்புகழ் பிறர் வாய்க்கேட்டு மகிழ்தல் அதற்குச் செய்யுள் :

"மராமர மிவையென வலிய தோளினான்,

அராவனை அமலனென் றயிர்க்கு மாற்றலான், இராமனென் பதுபெயர். இளைய கோவொடும் பராவரு முனியொடும் பதிவந் தெய்தினான்.'

(கம்பர்-பால-கார்முகப்-செய். 59)